கிரியான் மாவட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் புத்தாக்கச் சாதனை


பேரா, கிரியான் மாவட்டத்தில் புத்தாக்க ஆசிரியருக்கான போட்டி (PERTANDINGAN GURU INOVATIF 2018) நடைபெற்றது. இந்தப் போட்டியில் கிரியான் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்  கலந்துகொண்டு குழு முறையில் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளனர்.

வெற்றிபெற்ற ஆசிரியர்களும் அவர்களின் தலைமையாசிரியர்களும்

மே 30 & 31 ஆகிய இரண்டு நாட்களுக்கு நடைபெற்ற இந்தப் புத்தாக்க ஆசிரியருக்கான போட்டியில் ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி, சுங்கை போகா தமிழ்ப்பள்ளி மற்றும் களும்போங் தோட்டத் தமிழ்ப்பள்ளி  ஆசிரியர்கள்  தங்களின் புத்தாக்கத்தைக் காட்சிப்படுத்தினர்

மெதுபயில் மாணவர்களுகான மகிழறிவியல்எனும் விளையாட்டு உத்தியினை அறிவியல் பாடத்தில் பயன்படுத்தி ஆறுமுகம் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களான குமாரி.பரிமளம் பலராமன், குமாரி துர்கா தேவி சவுந்தர ராஜன், திரு. பிரகலாதன் பாலகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டைப் பெற்றனர். இந்த உத்தி முறையின் வழி அறிவியல் பாடத்தில் மெது பயில் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதுடன்  அவர்களின் உயர்நிலை சிந்தனைத் திறனை அதிகரிக்கும் வகையிலும் அமைந்துள்ளது

ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்


தொடர்ந்து, களும்போங் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களான குமாரி. காயத்திரி தேவநாதன், குமாரி. கலைவாணி செங்கோடன், குமாரி. பவித்திரா பத்மநாதன் ஆகியோர் குவெஸ்பூன் (QUESSPOON) எனும் அணுகுமுறையை அறிமுகப்படுத்திப் பாராட்டினைப் பெற்றனர். இவ்வணுகுமுறையானது மாணவர்களின் மதிப்பீட்டில் ஏற்படும் சிக்கலைக் களைய துணை புரியும் வகையில் அமைந்துள்ளது.


களும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் - தலைமையாசிரியர் பேச்சுமுத்து
மேலும், சுங்கை போகா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களான குமாரி.தி.மோனேஸ் நாச்சியா ரூபிணி, திரு. .சார்ல்ஸ், குமாரி..யோகேஸ்வரி ஆகியோர் 21-ஆம் நூற்றாண்டுக் கற்றல் கற்பித்தலில் பவர் காட் எனும் அணுகுமுறையினை அறிமுகம் செய்து பாராட்டினைப் பெற்றனர். இவ்வணுகுமுறையின் வழி தேசிய மொழி பாடத்தில் தங்களின் இலக்கணத் திறனை மேம்படுத்தும் நோக்கத்திற்காக இப்புத்தாக்க அணுகுமுறை உருவாக்கப்பட்டுள்ளது


சுங்கை போகா தோட்டத் தமிழ்ப்பள்ளி

மொத்தமாக 37 குழுக்கள் பங்கேற்ற இப்போட்டியில் மூன்று தமிழ்ப்பள்ளிகள் மட்டும் கலந்து கொண்டு வெள்ளி பதக்கத்தை வென்று சாதனைப் படைத்துள்ளன. அதனுடன், இம்மூன்று பள்ளிகளும் மாநில அளவில் நடைபெறவிருக்கும் புத்தாக்க ஆசிரியருக்கான போட்டியிலும் பங்கெடுக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது மேலும்மொரு மகிழ்ச்சியான தகவலாகும்.




பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் இவ்வாறு புத்தாக்கங்களில் ஈடுபடுவதும் சாதனைகள் படைப்பதும் பாராட்டுக்குரியதாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாது, தமிழ்ப்பள்ளிகளில் 21ஆம்  நூற்றாண்டுக் கற்றல் திறன்களுக்கு உரிய இடம் கொடுக்கப்படுகிறது என்பதை உறுதிபடுத்துவதாக உள்ளது.

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SJK(T) LDG.GULA – ‘தேன்சிட்டு’ மாணவர் இதழ் வெளியீடு

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

i-EIE 2019 புத்தாக்கப் போட்டியில் பேரா தமிழ்ப்பள்ளிகள் சாதனை

WORDWALL மூலம் மின் பயிற்சிகள் உருவாக்குவது எப்படி?