SJKT LDG.CHERSONESE – பெர்லிஸ் ஆசிரியர்களின் அடைவுக் குறியீட்டுப் பயணம்

பேரா, கிரியான் மாவட்டத்திலுள்ள செர்சோனீசு தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு அடைவுக் குறியீட்டுப் பயணம் (Lawatan Penanda Arasan) மேற்கொண்டு பெர்லிஸ் மாநில ஆசிரியர்கள் வருகை மேற்கொண்டனர். கடந்த 13.05.2018 ஞாயிறன்று இந்த நிகழ்ச்சி நன்முறையில் நிகழ்ந்தது.


கங்கார் தமிழ்ப்பள்ளி பெர்லிஸ் மாநிலத்தில் செயல்படும் ஒரே தமிழ்ப்பள்ளியாகும். அந்தப் பள்ளியைச் சேர்ந்த தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் ஆகிய 25 பேர் இந்தப் பயணத்தில் கலந்துகொண்டனர். பெர்லிஸ் மாநிலக் கல்வித் திணைக்களத்தின் கண்காணிப்பாளர் திருமதி ஆனந்தமேரி கணேசன் தலைமையில் இந்த வருகையை மேற்கொண்டனர்.




செர்சோனீசு தமிழ்ப்பள்ளியின் பாவாணர் கருவள நடுவம் கடந்த 4 ஆண்டுகளாகக் கிரியான் மாவட்ட நிலையில் சிறந்த கருவள நடுவமாக வெற்றிபெற்றுள்ளது. 2016, 2017 ஆகிய இரண்டு ஆண்டுகள் பேரா மாநில நிலையில் சிறந்த கருவள நடுவம் எனத் தேர்வாகியது. இதன் அடிப்படையில் 2017ஆம் ஆண்டில் தேசிய நிலைப் போட்டிக்குத் தகுதி பெற்று 4ஆவது நிலையை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சிறந்த அடைவையும் சிறப்பையும் பெற்ற பாவாணர் கருவள நடுவத்தைப் பார்வையிடவும் அதன் அமைப்பு, செயற்பாடு, பயன்பாடு ஆகியவை குறித்து அறிந்துகொள்ளவும் இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டதாக பெர்லிஸ் மாநிலக் கல்வித் திணைக்களத்தின் கண்காணிப்பாளர் திருமதி ஆனந்தமேரி கணேசன் குறிப்பிட்டார். மேலும், இந்தப் பயணத்தின் வழியாக ஒரு சிறந்த தமிழ்ப்பள்ளியையும் ஆற்றல் வாய்ந்த தலைமையாசிரியர், ஆசிரியர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.




பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் சுப.சற்குணன், செர்சோனீசு தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் இர.முனுசாமி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 





Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

18ஆம் ஆண்டு வளர்தமிழ் விழா (பேரா மாநில நிலை)

செந்தமிழ் விழா 2018 - பேரா மாநிலத்தின் குழுவினர் பங்கேற்பு

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்