பேரா மாநிலத் தலைமையாசிரியர் கழகப் பொதுக்கூட்டம்

பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் 26ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம் கடந்த 24.05.2018 வியாழக்கிழமையன்று ஈப்போ எக்செல்சியல் விடுதியில் நிகழ்ந்தது.


*பேரா மாநிலக் கல்வி இயக்குநர் டத்தோ மாட் வாசிம் பின் இட்ரிஸ் இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திறப்புரை ஆற்றினார்.

*கழகத்தின் தலைவர் ந.பத்மநாதன் தலைமையுரை ஆற்றினார்.

*ஆலோசகரும் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளருமான சுப.சற்குணன் ஆலோசர்கள் உரை வழங்கியதோடு தேர்தலை வழிநடத்தினார்.

*செர்சோனீசு தோட்டத் தமிழ்ப்பள்ளி, பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளி, பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளின் சாதனைகள் காணொலிக் காட்சியாகப் படைக்கப்பட்டது.

*2018ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் அடைந்த வெற்றிகளும் சாதனைக் கதைகளும் திறமுனைக் காட்சியாகப் படைக்கப்பட்டது.

*இந்த ஆண்டுக் கூட்டத்தில் பேரா மநிலத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் புதிய தலைவராக பத்மநாதனும் துணைத்தலைவராக மு.அர்ச்சுணனும் தெரிவு செய்யப்பட்டனர். பொருளாளராக இரா.கணேசன் தேர்ந்தெடுக்கப்படார்.

*இறுதியாக, செயலாளர் ஜெயக்குமாரின் நன்றியுரையுடன் ஆண்டுப் பொதுக்கூட்டம் நிறைவடைந்தது.

*பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்கள் 110 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தலைமையாசிரியர் கழக செயலவையுடன் கல்வி அமைச்சின் முன்னாள் முகமை அமைப்பாளர் சு.பாஸ்கரன்



திறப்புரை - டத்தோ மாட் லாசிம் பின் இட் ரிஸ்
 
தலைமையுரை - ந.பத்மநாதன்


  
ஆலோசகர் உரை - சுப.சற்குணன்








Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

YOUTUBE காணொலி தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

SJK(T) LDG.GULA – ‘தேன்சிட்டு’ மாணவர் இதழ் வெளியீடு

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

பாவாணம் மின் நாள் பாட த்திட்டத்தினை உருவாக்கி ஆசிரியர்கள் சாதனை