SJK(TAMIL) GERIK - உலகப் புவி நாள் போட்டியில் வெற்றி
உலக புவி நாள் 46 ஆவது முறையாக இந்த ஆண்டும் கொண்டாடப்பட்டது. மனித வாழ்வியலின் அடிப்படையான புவி தொடர்பிலான விழிப்புணர்வு காலம் காலமாக வௌியிடப்பட்டு வருகின்றது. புவியின் பாதுகாப்புத் தன்மைகளைக் கருத்தில் கொண்டு 1970 ஆம் ஆண்டு முதலாவது உலகப் புவி நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
கடந்த 22 ஏப்பிரல் 2018-ஆம் பக்கலன்று மலேசிய
இயற்கை வள அமைப்பின் ஏற்பாட்டில் இயற்கையைப் பாதுகாக்கும் சில நடவடிக்கைகளும்
போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இத்தேசிய அளவிலான நிகழ்ச்சி டாக்டர்.சந்திரசேகரன்
சுப்ரமணியம் அவர்களின் தலைமையில் நடந்தேறியது. கெடா, பேரா, சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் பினாங்கு போன்ற மாநிலங்களிலிருந்து பல
பள்ளிகள் இதில் கலந்துகொண்டன.
பேரா மாநிலத்தைச்
சேர்ந்த கிரிக் தமிழ்ப்பள்ளி மூன்று போட்டிகளில் வென்று தேசிய அளவில் சாதனை
படைத்துள்ளது. இயற்கைச் சுற்றுச் சூழல் மறுபயனீட்டுப் பிரிவில் சில்வியா மிர்தலா முதல்
வாகையாளராகவும், சூர்யா கண்ணன் இரண்டாவது நிலையிலும் வென்று இக்குழுவகப்
பள்ளிக்கு நற்பெயரை ஈட்டித் தந்துள்ளனர்.
இக்குழுவகப் பள்ளியின்
வெற்றிக்கு முதுகெலும்பாக நின்ற அனைத்து ஆசிரியர்களையும் தாம் பாராட்டுவதாகத்
தலைமையாசிரியர் திருமதி.இராஜம்பாள் வீரசாமி அவர்கள் தெரிவித்தார். இந்த வெற்றியானது இப்பள்ளியின் மேம்பாட்டுக்கு ஒரு மிகச்சிறந்த ஊக்குவிப்பாக அமையும் என அவர் தெரிவித்தார்.
Comments
Post a Comment