'ஆசிரியம்' ஒரு தமிழ்ப்பள்ளி உருவாக்கியுள்ள குறும்படம்

2018 ஆசிரியர் நாளை முன்னிட்டு, கட்டித் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 'ஆசிரியம்' எனும் குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்ப்பள்ளி ஆசிரியர் ஒருவர் இயக்கியுள்ள இந்தக் குறும்படம் பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகின்றது.

பேரா மாநிலம் கோலா கங்சாரில் உள்ள கட்டித் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் செல்வி தனலட்சுமி குப்புசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆசிரியம்' குறும்படம் நல்ல கதையமைப்பு கொண்டாதாக அமைந்துள்ளது. அதில் நடித்துள்ள மாணவர்களின் நடிப்புத்திறன் இன்னும் மேம்படுத்த வேண்டிய நிலையில் இருந்தாலும், ஒரு தமிழ்ப்பள்ளியின் முதல் முயற்சி என்பதற்காகவே மனதாரப் பாராட்டலாம். 


வகுப்பறையில் மொழிப்பாடம் வழியாக கற்கும் மொழியாற்றல், கலைத்திறன், நடிப்புத்திறன் ஆகியவை வேறொரு தலத்தில் வெளிப்படுவதைக் காணும்பொழுது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடையே மறைந்துள்ள கலைத் திறமையை வெளிக்கொண்டுவரும் இதுபோன்ற முயற்சிகளைப் பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும்.

Comments

  1. நல்ல முயற்சி..தொடருங்கள் தங்களின் சீரியப் பணிதனை..நான் படித்த தமிழ்ப்பள்ளியில் இப்படியொரு அரிய முயற்சியைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்..கட்டித் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் படித்து இன்று ஓர் ஆசிரியராகப் பணியாற்றுவதில் மகிழ்கிறேன்..இக்கதையில் வரும் இரக்கக்குணம் கொண்ட ஆசிரியரைப் பார்க்கும் போது எனக்கு மலாய் மொழி போதித்த ஆசிரியரின் நினைவு தான் வருகிறது..

    ReplyDelete
  2. நல்ல முயற்சி..தொடருங்கள் தங்களின் சீரியப் பணிதனை..நான் படித்த தமிழ்ப்பள்ளியில் இப்படியொரு அரிய முயற்சியைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்..கட்டித் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் படித்து இன்று ஓர் ஆசிரியராகப் பணியாற்றுவதில் மகிழ்கிறேன்..இக்கதையில் வரும் இரக்கக்குணம் கொண்ட ஆசிரியரைப் பார்க்கும் போது எனக்கு மலாய் மொழி போதித்த ஆசிரியரின் நினைவு தான் வருகிறது..

    ReplyDelete
  3. நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

YOUTUBE காணொலி தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

SJK(T) LDG.GULA – ‘தேன்சிட்டு’ மாணவர் இதழ் வெளியீடு

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

பாவாணம் மின் நாள் பாட த்திட்டத்தினை உருவாக்கி ஆசிரியர்கள் சாதனை