கணிதச் செயலியை உருவாக்கி பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் சாதனை

மே திங்கள் 6 & 7 ஆகிய இரண்டு நாட்களுக்கு நடைபெற்ற இந்தக்
கண்காட்சியில் தெலுக் இந்தான், சப்ராங் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் செல்வா
இலெட்சுமணன், சுங்கை குருட் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் நரேஸ் தேவதாஸ், பாகான் செராய்
தமிழ்ப்பள்ளி ஆசிரியர் சஞ்சய் குமார், ரூபனா தமிழ்ப்பள்ளி முன்னாள் ஆசிரியர்
ஜீவேந்திரா பாண்டியன் ஆகிய நால்வரும் தங்களின் புத்தாக்கத்தை அறிமுகம்
செய்துள்ளனர்.
மெதுபயில் மாணவர்களுக்கான கணித மின்னூல் செயலி ஒன்றனை இவர்கள் உருவாக்கி சாதனை
செய்துள்ளனர். இந்தப் புத்தாக்கத்திற்குத் தான் இவர்களுக்குத் தங்கப் பதக்கம்
வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மொத்தமாக 225 குழுக்கள் பங்கேற்ற இக்கண்காட்சியில்
கலந்துகொண்ட தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஒரே குழுவினராக இவர்கள் பாராட்டைப்
பெற்றுள்ளனர்.
கணிதப் பாடம் தொடர்பான செயலியை உருவாக்கி தேசிய நிலையில் தங்கப் பதக்கம் வென்று மகத்தான
சாதனை செய்திருக்கும் செல்வா இலெட்சுமணன், நரேஸ் தேவதாஸ், சஞ்சய் குமார், ஜீவேந்திரன்
பாண்டியன் ஆகிய நான்கு ஆசிரியர்களும் தமிழ்ப்பள்ளிகளுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்
என்றால் மிகையாகாது.
Comments
Post a Comment