SJKT MENGLEMBU - பண்புத் தளிர்கள் நிகழ்ச்சி (காணொலி இணைப்பு)
மாணவர்களிடையே நற்பண்புகளையும் மாந்த நேயத்தையும் வளர்க்கும்
வகையில் மகிழம்பூ தமிழ்ப்பள்ளியில் ‘பண்புத் தளிர்கள்’ என்னும்
சிறப்பானதொரு நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 27.05.2018 ஞாயிறன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்
170 மாணவர்களும் 120 பெற்றோர்களும், ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்
என்பது மேலுமொரு சிறப்பாகும்.
மாண்புமிகு சிவக்குமார் பரிசு வழங்குகிறார் |
நற்பண்புகளின் மேன்மையையும் அவசியத்தையும் உணர்த்தும் வகையில்
பல நடடிக்கைகள், போட்டிகளை உள்ளடக்கி நடைபெற்ற இந்த நிகழ்ச்சி மாணவர்களின் உள்ளத்தைக்
கவரும் வகையில் அமைந்தது. மேலும், வந்திருந்த பெற்றோர்களுக்குத்
தனியாக விழிப்புணர்வு உரை, கலந்துரையாடல் எனச் சில நிகழ்ச்சிகள்
நடைபெற்றன.
பேரா சத்திய சாயிபாபா மன்றத்தின் கல்விக்குழு இந்நிகழ்ச்சியை
பொறுப்பேற்று நடத்தியது. அதன் ஒருங்கிணைப்பாளர் இராமகிருஷ்ணன் நிகழ்ச்சியைத் தொடக்கி
வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பு வருகை மேற்கொண்ட பத்து காஜா நாடாளுமன்ற
உறுப்பினர் சிவக்குமார் அவர்கள் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை எடுத்து வழங்கினார்.
இந்த அருமையான நிகழ்ச்சி நடைபெறுவதற்கு அனைத்து ஆலோசனைகளையும்
வழங்கிய முன்னாள் ஆய்நர் பிரிவு அதிகாரி சாய் கிருஷ்ணன், நிகழ்ச்சியை
முன்னின்று நடத்தி உதவியது குறிப்பிடத்தக்கது.
பண்புத் தளிர்கள் நிகழ்ச்சி வெகுச் சிறப்பாக நிகழ எல்லா வகையிலும்
உதவிகளை வழங்கிய அனைவருக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. மாரியம்மா நன்றி தெரிவித்துக்கொண்டார்.
பண்புத் தளிர்கள் நிகழ்ச்சியின் காணொலி:-
Comments
Post a Comment