மாணவர் முழக்கம் 2021 - பேராவின் 2 மாணவர்கள் இறுதிப் போட்டிக்குச் செல்கின்றனர்


மாணவர் முழக்கம் 2021 இறுதிச் சுற்றுக்குப் பேரா மாநிலத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். மலேசியா மட்டுமல்லாது அனைத்துலக நிலையிலும் புகழ்பெற்ற பேச்சுப் போட்டியான மாணவர் முழக்கம் 2021 அரையிறுதிப் போட்டி  9.10.2021ஆம் நாள் நடந்து முடிந்தது. இதில், 22 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். பேரா மாநிலத்தின் 5 மாணவர்கள் களம் இறங்கினர். போட்டியாளர்களின் படைப்புத் திறனை மதிப்பீடு செய்த நடுவர் குழுவினர் இறுதிப் போட்டிக்கு 4 மாணவர்களைத் தெரிவு செய்தனர்.

கீழ்ப்பேரா மாவட்டம், பத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி தர்சினி குமரன் மற்றும் வடகிந்தா மாவட்டம், பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளி மாணவன் ஜோனஸ் அபிசியா எட்வின் ஆகிய 2 மாணவர்கள் மிகச் சிறப்பான படைப்பினை வழங்கி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளனர். 

இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ள பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி சாதனைச் செல்வங்களின் விவரங்களைக் கீழே காணலாம்.


2 orang murid dari SJK(T) Ldg.Batak Rabit, Daerah Hilir Perak dan SJK(T) Perak Sangetha Sabah, Daerah Kinta Utara layak ke Pertandingan Akhir Pidato Manavar Muzhakkam Peringkat Kebangsaan 2021  

மாணவர் முழக்கம் அனைத்துலகப் போட்டிக்கு மலேசியாவின் நிகராளிகளைத் தேடும் இந்தப் பயணத்தில் பேராவைச் சேர்ந்த 2 மாணவர்கள் இறுதிப் போட்டிக்கு செல்வது பெருமையும் பாராட்டுக்குரியதும் ஆகும். ஜொகூர் மற்றும் பினாங்கு மாநிலங்களிலிருந்து மேலும் 2 மாணவர்கள் இறுதிப் போட்டியில் களம் காணவுள்ளனர்.

இவ்வாண்டில்  பேரா மாநிலத்திலிருந்து ஏறக்குறைய 70 பள்ளிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். ஏற்கனவே,   24 மாணவர்கள் காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர். பின்னர் அரையிறுதிச் சுற்றுக்கு 5 மாணவர்கள் முன்னேறினார்கள்.

தற்போது இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகி 'வெள்ளி மாநிலம் வெற்றி மாநிலம் என்பதை நிரூபித்துள்ள நமது 2 மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்குப் பாராட்டும் நல்வாழ்த்தும் உரித்தாகட்டும். அதோடு, மாணவர்களின் வெற்றிக்காகப் பின்னணியில் உழைத்திருக்கும் ஆசிரியர்கள் மற்றும் உதவியிருக்கும் பெற்றோர்களுக்கு நன்றிகலந்த பாராட்டுகள். மேலும், மாணவர்களுக்கு ஊக்கம் கொடுத்து வழிகாட்டிய தலைமையாசிரியர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

10ஆம் ஆண்டில் காலடி பதிக்கும் மாணவர் முழக்கம் தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே பேச்சாற்றலை உருவாக்குவதில் தனி முத்திரைப் பதித்த ஒரு போட்டியாகும். வணக்கம் மலேசியா நிறுவனத்தின் ஏற்பாட்டில் மலேசியக் கல்வி அமைச்சின் ஆதரவுடன்  இப்போட்டி நடைபெறுகிறது.

Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

SJK(T) LDG.GULA – ‘தேன்சிட்டு’ மாணவர் இதழ் வெளியீடு

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

ORIGAMI காகிதச் சிற்பக்கலை செய்து மகிழ்வோம்

SJK(T) LADANG GULA - 'தொல்காப்பியர் அறிவகம்' உயர்நிலைச் சிந்தனைத் திறன் வகுப்பறை திறப்புவிழா

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

தமிழ்க்கல்வி மாநாட்டுக் கட்டுரைப் படைப்பில் பேரா ஆசிரியர்கள் முதலிடம்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்