SJK(T) LDG.AYER TAWAR - MSSM தேசிய நிலை சதுரங்கப் போட்டிக்கு தர்வின் முன்னேறினார்

மஞ்சோங் மாவட்டம், ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவன் தர்வின் சிவசண்முகம் தேசிய நிலை சதுரங்கப் போட்டிக்குப் பேரா மாநிலத்தின் நிகராளியாகத் தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளார்.


மாவட்ட நிலையில் தொடங்கி பின்னர் மாநில நிலையில் இந்தச் சதுரங்கப் போட்டி நடைபெற்றது. மலாய், சீன, தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர். 12 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவன் தர்வின் சிவசண்முகம் கலந்துகொண்டார்.

மாவட்ட நிலையில் மிகச் சிறந்த வெற்றியைப் பதிவு செய்து பிறகு 27 - 29.08.2021இல் நடந்த மாநில நிலையிலான போட்டியில் முதல் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், தேசிய நிலை சதுரங்கப் போட்டிக்குத் தகுதிபெறும் மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் கலந்துகொள்ள 3 மலாய் பள்ளி மாணவர்களுடன் தர்வின் சிவசண்முகம் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார்.


இவருடைய இந்த வெற்றியானது ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மட்டுமல்லாது பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கே பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

இந்தச் சாதனை மாணவரை உருவாக்கிய ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கும் தலைமையாசிரியர் திரு.ந.கிருஷ்ணன் மற்றும் பயிற்றுநர் ஆசிரியர் திருமதி நளினி இராமன் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டுகள். செல்வன் தர்வின் மற்றும் வீட்டில் ஆர்வமூட்டி உதவிய பெற்றோருக்கும் நல்வாழ்த்துகள்.

செல்வன் தர்வின் சிவசண்முகம் தேசிய நிலை சதுரங்கப் போட்டியில் சிறந்த வெற்றியைப் பதிவு செய்ய வேண்டுவோமாக! 

Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

SJK(T) LDG.GULA – ‘தேன்சிட்டு’ மாணவர் இதழ் வெளியீடு

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

ORIGAMI காகிதச் சிற்பக்கலை செய்து மகிழ்வோம்

SJK(T) LADANG GULA - 'தொல்காப்பியர் அறிவகம்' உயர்நிலைச் சிந்தனைத் திறன் வகுப்பறை திறப்புவிழா

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

தமிழ்க்கல்வி மாநாட்டுக் கட்டுரைப் படைப்பில் பேரா ஆசிரியர்கள் முதலிடம்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்