மாணவர் முழக்கம் 2021 - பேரா மாநிலத்தில் 24 மாணவர்கள் காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர்


மாணவர் முழக்கம் 2021 காலிறுதி சுற்றுக்குப் பேரா மாநிலத்தைச் சேர்ந்த 24 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். மலேசியாவில் மட்டுமல்லாது அனைத்துலக நிலையிலும் புகழ்பெற்ற பேச்சுப் போட்டியான மாணவர் முழக்கம் 2021 தகுதிச் சுற்று நடந்து முடிந்துள்ளது. இதில், அதிக எண்ணிக்கையில் பேரா மாநிலத்தின் மாணவர்கள் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது.

10ஆம் ஆண்டில் காலடி பதிக்கும் மாணவர் முழக்கம் தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே பேச்சாற்றலை உருவாக்குவதில் தனி முத்திரைப் பதித்த ஒரு போட்டியாகும். வணக்கம் மலேசியா நிறுவனத்தின் ஏற்பாட்டில் மலேசியக் கல்வி அமைச்சின் ஆதரவுடன்  இப்போட்டி நடைபெறுகிறது.

தகுதிச் சுற்றில் போட்டியாளர்கள் பேசி  காணொலியாகப் பதிவுசெய்து  போட்டிக்கு அனுப்பி வைத்தனர். அதிலிருந்து நடுவர் குழுவினர் சிறந்த 120 மாணவர்களைக்  காலிறுதி சுற்றுக்குத் தெரிவுசெய்துள்ளனர்.

பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 24 மாணவர்கள் மாணவர் முழக்கம் 2021 காலிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

மாணவர் முழக்கம் 2021 காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள மாணவர்களின் விவரங்களைக் பின்வரும் அட்டவணையில் காணலாம்.



இவ்வாண்டில்  பேரா மாநிலத்திலிருந்து ஏறக்குறைய 70 பள்ளிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். 

மாணவர் முழக்கம் 2021 காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகி 'வெள்ளி மாநிலம் வெற்றி மாநிலம் என்பதை நிரூபித்துள்ள நமது 24 மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்குப் பாராட்டும் நல்வாழ்த்தும் உரித்தாகட்டும். அதோடு, மாணவர்களின் வெற்றிக்காகப் பின்னணியில் உழைத்திருக்கும் ஆசிரியர்கள் மற்றும் உதவியிருக்கும் பெற்றோர்களுக்கு நன்றிகலந்த பாராட்டுகள். மேலும், மாணவர்களுக்கு ஊக்கம் கொடுத்து வழிகாட்டிய தலைமையாசிரியர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

Comments

Popular Posts:-

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

ORIGAMI காகிதச் சிற்பக்கலை செய்து மகிழ்வோம்

தமிழ்க்கல்வி மாநாட்டுக் கட்டுரைப் படைப்பில் பேரா ஆசிரியர்கள் முதலிடம்

SJK(T) LADANG GULA - 'தொல்காப்பியர் அறிவகம்' உயர்நிலைச் சிந்தனைத் திறன் வகுப்பறை திறப்புவிழா

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

தமிழ்ப்பள்ளிகளின் நனிச்சிறந்த நடைமுறை : தலைமையாசிரியர்கள் சிறப்பான படைப்பு