பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளில் அனைத்துலகத் தாய்மொழி நாள் விழா

காணொலி இணைப்பு ⏭ அனைத்துலத் தாய்மொழி நாள் பிப்பிரவரி 21ஆம் நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பேரா மாநிலத்தில் உள்ள நூறுக்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளில் அனைத்துலகத் தாய்மொழி நாள் விழா வெகுச் சிறப்பாக நடந்தது. 2018இல் பேரா மாநிலத்தில் முதன் முறையாக 35 தமிழ்ப்பள்ளிகளில் தாய்மொழி விழா கொண்டாடப்பட்டது. 2019இல் எண்பது பள்ளிகளில் இவ்விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த 2020இல் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து நூறுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இவ்விழா நடந்துள்ளது. பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளில் தாய்மொழி விழா மிகவும் சிறப்பாகவும் கோலாகலமாகவும் தமிழ்மொழி உணர்வோடும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கொண்டாடப்படுகிறது. மகிழம்பூ தமிழ்ப்பள்ளி, ஈப்போ பள்ளிகள் தோறும் தமிழ் சார்ந்த படைப்புகள், நாடகம், நடனம், காணொலிப் படைப்பு, தமிழறிஞர் மாறுவேடம், தமிழ்க்கோலம், சிறப்புரை எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியர்களும் மாணவர்களும் பண்பாட்டு உடையில் கலந்துகொள்வது நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது. ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி மேல...