SJK(TAMIL) PANGKOR - விழாக் கோலம் கண்ட விளையாட்டுப் போட்டி


பேரா மாநிலத்தில் நாற்புறமும் கடல்சூழ்ந்த பங்கோர் தீவில் உள்ள ஒரே தமிழ்ப்பள்ளியில் கடந்த 07.06.2018 வியாழனன்று விளையாட்டுப் போட்டி விழா வெகுச் சிறப்பாக நடந்து முடிந்தது.





பள்ளியின் தலைமையாசிரியர் குமாரி.தனலட்சுமி இரோசன் தலைமையில், மாலை மணி 2:30க்குத் தொடங்கிய இந்த விளையாட்டுப் போட்டி விழாவில் பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் மதுரைமுத்து கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியை அதிகாரப்படியாகத் தொடக்கிவைத்தார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் இராஜேந்திரன் முனியாண்டி, பெ.ஆ.சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், பங்கோர் பத்திரகாளியம்மன் ஆலயப் பொறுப்பாளர்கள், முன்னாள் தலைமையாசிரியர்கள் எனப் பலரும் இவ்வாண்டின் விளையாட்டுப் போட்டி விழாவில் வந்து கலந்து சிறப்பித்தனர்.




மஞ்சல், நீலம், சிவப்பு என மூன்று இல்லங்கள் வாரியாகப் பங்கோர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் போட்டிகளில் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பங்கோர் வாழ் பெற்றோர்களும் பள்ளியின் முன்னாள் மாணவர்களும் திரளாக வருகை தந்ததால் விளையாட்டுப் போட்டியானது விழாக் கோலம் கண்டது என்றால் மிகையாகாது.












Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

PKP HOME BASED LEARNING : இல்லிருப்புக் கற்றல் துணைப் பாடங்கள், பயிற்சிகள், காணொலிகள் & மனமகிழ் கற்றல் மூலங்கள்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - DAERAH KINTA UTARA

QUIZIZZ மூலம் புதிர் உருவாக்குவது எப்படி?

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

SJK(T) LDG.BULUH AKAR - அனைத்துலகப் புத்தாக்கப் போட்டிக்காக பாங்காக் நோக்கிப் பயணம்

YOUTUBE காணொலி தமிழ்மொழிப் பாடங்கள் - பாகம் 1