SJK(TAMIL)ST.PHILOMENA CONVENT - சிலாங்கூர் ஆசிரியர்களின் அடைவுக் குறியீட்டுப் பயணம்

கடந்த 09.06.2018 சனிக்கிழமையன்று சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த 40 ஆசிரியர்கள் பேரா, ஈப்போவிலுள்ள புனித பிலோமினா கான்வணட் தமிழ்ப்பள்ளிக்கு அடைவுக் குறியீட்டுப் பயணம் மேற்கொண்டு வருகை தந்தனர்.

சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த சீபோர்ட் தமிழ்ப்பள்ளி, பிரௌன்ஸ்டன் தமிழ்ப்பள்ளி, நைகல் கார்டன் தமிழ்ப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளைச் சேர்ந்த தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட 40 ஆசிரியர்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டு வருகை புரிந்தனர். காலை மணீ 10:00 தொடங்கி பிற்பகல் மணி 1:00 வரையில் இந்த நிகழ்ச்சி நன்றே நிகழ்ந்தது.

புனித பிலோமினா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் ஐயை சங்கரி, துணைத் தலைமையாசிரியர்கள், பெ.ஆ.சங்கத் தலைவர் ஜெயசீலன், பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் மருத்துவர் சுப்பிரமணியம் ஆகியோர் வருகை புரிந்த சிலாங்கூர்  மாநில ஆசிரியர்களை இன்முகத்தோடு வரவேற்றனர்.

புனித பிலோமினா கான்வண்ட் தமிழ்ப்பள்ளியின் சிறப்புகள் பற்றியும் பள்ளியின் சிறப்பான அடைவுகள் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், வரையறுத்த கற்றல் நேரம் (Melindungi Masa Instrusional - MMI) குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் விளக்கவுரை ஆற்றினார்.

பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் சுப.சற்குணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். 


சீபோர்ட் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்

பிளௌன்ஸ்டன் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்

நைகல் கார்டன் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்

அமைப்பாளர் சுப.சற்குணன்

தலைமையாசிரியர் சங்கரி

வாரியத் தலைவர் மருத்துவர் சுப்பிரமணியம்

Comments

Popular Posts:-

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]