HARI GURU PERAK 2022 - தலைமையாசிரியர் திருமதி இராஜம்பாள் ஆசிரியர் திருமதி அர்வினா விருது பெற்றனர்

பேரா மாநில நிலை ஆசிரியர் நாள் விழா கடந்த 19.05.2022ஆம் நாள், தஞ்சோங் மாலிம் உப்சி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பேரா மாநிலக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடந்த இவ்விழா பேரா மாநில முதல்வர் மாண்புமிகு டத்தோ சிறி சரானி முகமது தலைமையில் நடந்தேறியது.


2022ஆம் ஆண்டின் ஆசிரியர் நாள் விருதுகள் வழங்கி ஆசிரியர்கள் சிறப்பிக்கப்பட்டனர். விருது பெற்ற ஆசிரியர்களுள் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் ஆகிய இருவரும் அடங்குவர்.

கோல கங்சார் மாவட்டம், டோவன்பி தோட்டத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் திருமதி இராஜம்பாள் வீராசாமி "ஆசிரியர் நன்மதிப்பு விருது" (Pingat Penghormatan Guru) பெற்றார். மிகச் சிறப்பான நிருவாகத் திறனை வெளிப்படுத்தியதோடு பள்ளி உருமாற்றுத் திட்டங்களை மேற்கொண்டதன் அடிப்படையில் தலைமையாசிரியர் திருமதி இராஜம்பாள் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.


PINGAT PENGHORMATAN GURU

PN.RAJAMBAL A/P VEERASAMY

GURU BESAR,

SJK(T) LADANG DOVENBY

தவிர, பாகான் டத்தோ மாவட்டம், ஜென்றாட்டா தோட்டம் பிரிவு 3 தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் திருமதி அர்வினா சுப்பிரமணியம் "மெய்நிகர் கல்வி அடையாள ஆசிரியர் விருது" (Guru Ikon Pendidikan Maya) வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். புத்தாக்கப் போட்டிகளில் கலந்துகொண்டு பல வெற்றிகளை ஈட்டியதோடு மாணவர்களையும் கலந்துகொள்ளச் செய்து சாதனை செய்தது மற்றும் மெய்நிகர் அணுமுறையைப் பயன்படுத்தி மிகச் சிறந்த முறையில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளைச் செயல்படுத்தியது ஆகிய காரணங்களுக்காக இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

GURU IKON PENDIDIKAN MAYA

PN.ARVEENA A/P SUBRAMANIAM

GURU,

SJK(T) LADANG JENDERATA BHG 3

2022 ஆம் ஆண்டு மாநில நிலை ஆசிரியர் நாள் விருது பெற்ற நமது தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள். இதன்மூலம் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஓர் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்ததோடு தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் தரத்தையும் இவர்கள் உயர்த்திக் காட்டியுள்ளனர் என்றால் மிகையாகாது.


Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

SJK(TAMIL) TUN SAMBANTHAN, BIDOR - ஜொகூர் ஆசிரியர்களின் அடைவுக் குறியீட்டுப் பயணம்

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SJK(T) LADANG CASHWOOD - இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை

தலைமையாசிரியர்களுக்கான தொழிற்றகைமை மேம்பாட்டுப் பயிலரங்கு 2019

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்