SJK(TAMIL) GERIK - விரைவாக உருமாற்றம் கண்டுவரும் குழுவகத் தமிழ்ப்பள்ளி

கிரிக் குழுவகத் தமிழ்ப்பள்ளி மிகச் சிறந்த பள்ளியாக உருமாறி வருகின்றது. இப்பள்ளியின் செயல் நடவடிக்கைகளும், கல்வி வளர்ச்சியும் மிகச் சிறப்பாக இருக்கின்றது. அதே வேளையில் பள்ளியில் பல்வேறு நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக நடந்துகொண்டிருக்கின்றன. இதன் வழி கிரிக் குழுவகத் தமிழ்ப்பள்ளியில் மாணவர் உருவாக்கப் பணிகள் மிகச் செம்மையாக நடைபெறுகின்றன என்று சொல்லலாம்.

பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.இராஜம்மா தலைமையிலும் பள்ளி ஆசிரியர்களின் ஒன்றுபட்ட உழைப்பிலும் இப்பள்ளியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நன்முறையில் நிகழ்ந்து வருகின்றன.

கடந்த 05.06.2018 செவ்வாய்க்கிழமை இப்பள்ளிக்கு வருகை மேற்கொண்ட பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் சுப.சற்குணன், கிரிக் தமிழ்ப்பள்ளியின் நிருவாகத்தையும் பள்ளியையும் வெகுவாகப் பாராட்டினார்.





பள்ளியின் நடவடிக்கைகள் பற்றி பெற்றோர்கள் அறிந்துகொள்வதற்கு ஏதுவாக வாகனம் நிறுத்துமிடத்தில் அறிவுப்புப் பலகை:-


மாணவரை வரவேற்கும் 'மினியன்' அலங்காரம்:-


மாணவர்களுக்காகக் காத்திருக்கும் பெற்றோர்கள் தங்கள் நேரத்தைக் கழிப்பதற்கு ' நாழிகையைக் கழிக்க நாளும் கற்போம் மூலை' :-


மாணவர்களுக்கான பயிற்சிகள் / விடுமுறைகாலப் பயிற்சிகள் கீழே படத்தில் உள்ள கூடையில் வைக்கப்பட்டிருக்கும். பெற்றோர்கள் கூடையில் உள்ள அட்டையில் மாணவர்களின் விவரங்களைப் பதிவுசெய்து பயிற்சித் தாள்களை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். இதனால், மாணவர்களின் கற்ற்லில் பெற்றோர்களும் ஈடுபட முடியும்.


பள்ளி நிகழ்ச்சிகள், நடவடிக்கைகள், தகவல்கள் பற்றி மாணவர்களே சொந்தமாகக் கண்டறிந்துகொள்ளும் வகையில் பொது இடத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணுவியல் தரவுச் செயலாக்கப் பகுதி.



மிகச் சிறப்பான முறையில் உருவாகிவரும் சிந்தனை மற்றும் எண்ணிம விளையாட்டு நடுவம் (Pusat Permainan Minda dan Digital). இதனை இப்பள்ளியில் தலைமைத்துவ பயிற்சிப் பணியை மேற்கொண்டுவரும் துணைத் தலைமையாசிரியர் பாலச்சந்திரன் பெரும் முயற்சி மேற்கொண்டு உருவாக்கியுள்ளார்.




குறைந்த மாணவர்கள் கொண்ட சிறு பள்ளியாக இருந்தாலும், கிரிக் தமிழ்ப்பள்ளி பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கிறது. அழகிய சுற்றுச் சூழலும் மாணவர்களைக் கவரும் வகையில் பல்வேறு பகுதிகளும் இப்பள்ளியின் வளாகத்தை மேலும் மெருகூட்டுவதாய் உள்ளன. பள்ளியில் நடைபெறும் கற்றல் கற்பித்தலும் மாணவர்களை மிகவும் கவரும் வகையில் உள்ளன. பள்ளியில் நடைபெறும் திட்டங்களும் நிகழ்ச்சிகளும் மாணவர்களுக்கு மனம்கிழ்வை ஊட்டுவதாக உள்ளன. மொத்தத்தில், கிரிக் தமிழ்ப்பள்ளியில் மாணவர் உருவாக்கப் பணி மிகச் சிறப்பாகவே நடைபெறுகிறது என்றால் அது மிகையில்லை.










Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

SJK(TAMIL) KERUH - மின்னல் பண்பலையின் இளம் வடிவமைப்பாளர் திட்டம்

“தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை…தொடர்ச்சியில் இருக்க வேண்டும்” – முத்து நெடுமாறன் உரை

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்