SJK(TAMIL) PERAK SANGGETHA SABAH - மாணவர் தன்னெழுச்சி முகாம் 2018

ஈப்போ, பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளியில் கடந்த 11.06.2018 & 12.06.2018 ஆகிய இரண்டு நாட்களுக்கு மாணவர் தன்னெழுச்சி முகாம் 2018 நடைபெற்றது.


பள்ளி நிருவாகம், பெ.ஆ.சங்கம், பெற்றோர்கள் ஆகிய மூன்று தரப்பினரின் கூட்டு முயற்சியாக இந்த முகாம் முறையாகத் திட்டமிட்டு நடத்தப்பட்டது. பள்ளியின் ஆறாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் ஓரிரவு பள்ளியிலேயே தங்கி இந்த 2 நாள் முகாமில் கலந்துகொண்டனர்.

பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் சுப.சற்குணன் சிறப்பு விருந்தினாராகக் கலந்துகொண்டு மாணவர் தன்னெழுச்சி முகாமினை அதிகாரப்படியாகத் தொடக்கி வைத்தார். அதுமட்டுமல்லாது மாணவர்களுக்காகச் சிறுகதை பட்டறையையும் நடத்திக்கொடுத்தார்.

திறப்புரை - சுப.சற்குணன்


தேர்ந்த ஆசிரியர்களின் பாட விளக்கவுரைகள், வழிகாட்டிகள், பட்டறைகள் ஆகியன நடைபெற்றதோடு தன்முனைப்பு உரை, யோகப் பயிற்சி, மாந்த வளப்பயிற்சி முதலான அங்கங்களும் இந்த முகாமில் இடம்பெற்றன.

பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.சந்திரிகா அப்பு தலைமையில் பள்ளியின் ஆசிரியர்கள் மிகவும் சிறந்த முறையில் இந்த முகாமை ஏற்பாடு செய்திருந்தனர். பெ.ஆ.சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ் தம்முடைய முழு ஒத்துழைப்பை வழங்கினார்.






தலைமையாசிரியர்

பெ.ஆ.சங்கத் தலைவர்

வருகையளித்த பெற்றோர்கள் / ஆசிரியர்கள்



Comments

Popular Posts:-

மாணவர் முழக்கம் 2022 -அரையிறுதிச் சுற்றுக்குப் பேராவின் 2 மாணவர்கள் தகுதி பெற்றனர்

PKP HOME BASED LEARNING : இல்லிருப்புக் கற்றல் துணைப் பாடங்கள், பயிற்சிகள், காணொலிகள் & மனமகிழ் கற்றல் மூலங்கள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

பேரா, மலேசியா – இலண்டன் தமிழ் ஆசிரியர்கள் இணையம் வழி கற்பித்தலில் இணைகின்றனர்.

WORDWALL : கணித வாய்பாடு புதிர்