SJK(TAMIL) TAPAH - உருமாற்றுப் பள்ளிக்கு அடைவுக் குறியீட்டுப் பயணம்

கடந்த 09.06.2018 சனிக்கிழமையன்று சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த 40 ஆசிரியர்கள் பேரா, தாப்பா உருமாற்றுத் தமிழ்ப்பள்ளிக்கு (Sekolah Transformasi - TS25 Kohort 2)  அடைவுக் குறியீட்டுப் பயணம் மேற்கொண்டு வருகை புரிந்தனர்.
சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த சீபோர்ட் தமிழ்ப்பள்ளி, பிரௌன்ஸ்டன் தமிழ்ப்பள்ளி, நைகல் கார்டன் தமிழ்ப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளைச் சேர்ந்த தலைமையாசிரியர்கள் உள்பட மொத்தம் 40 ஆசிரியர்கள் இந்தப் பயணத்தில் பங்கேற்றனர். மாலை மணி 2:30 தொடங்கி 6:00 வரையில் அவர்கள் தாப்பா தமிழ்ப்பள்ளியில் நேரத்தைச் செலவிட்டு நல்ல பயனைப் பெற்றனர்.
தாப்பா தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் ஐயை வனஜா, துணைத் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் வருகை புரிந்த சிலாங்கூர்  மாநில ஆசிரியர்களை மகிழ்வோடு வரவேற்று வாழை இலை போட்டு மதிய உணவு விருந்தோம்பல் செய்தார்கள்.
தப்பா தமிழ்ப்பள்ளியின் சிறப்புகள் பற்றியும் பள்ளியின் சிறப்பான அடைவுகள் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், உருமாற்றுப் பற்றி, 21ஆம் நூற்றாண்டு வகுப்பறை, கற்றல் எளிமையாக்கல் ஆகியவை குறித்து பள்ளியின் துணைத் தலைமையாசிரியர் குமரன் விளக்கவுரை ஆற்றினார்.
பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் சுப.சற்குணன் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். 


















Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

YOUTUBE காணொலி தமிழ்மொழிப் பாடங்கள் - பாகம் 1

மலேசிய சாதனை புத்தகத்தில் தடம் பதிக்கிறார் பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - DAERAH KINTA UTARA

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்