குழந்தை இலக்கிய மாநாட்டில் பேரா தமிழாசிரியர்களின் கட்டுரைப் படைப்பு
முதலாவது உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு கோலாலம்பூர்
மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேரா மாநிலத்தைச் சேர்ந்த செல்வா
இலெட்சுமணன், நரேஸ் தேவதாஸ்
ஆகிய இரண்டு தமிழாசிரியர்கள் ஆய்வுக் கட்டுரை படைத்துள்ளனர்.
08.06.2018 தொடங்கி 10.06.2018ஆம் நாள் வரையில் மூன்று நாட்களுக்கு
நடைபெற்ற இந்த பன்னாட்டு நிலையிலான மாநாட்டில் மலேசியா, சிங்கப்பூர், தமிழ்நாடு, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து
பேராளர்கள் கலந்துகொண்டனர்.
மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய
ஆய்வியல் துறையின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த மாநாட்டின் நோக்கம் ‘நலிந்துவரும் குழந்தை இலக்கிய
வளர்ச்சிக்குப் புத்துயிரூட்டல்’ என்பதாகும்.
எதிர்காலத் தலைமுறையினரான குழந்தைகள் தாய்மொழிப் பற்றோடும், இலக்கிய நாட்டமுடனும் பண்பாட்டுச்
செழுமையோடும், விழுமியங்களைப்
போற்றி வளர வேண்டுமென்பதனைக் கருத்தில் கொண்டு 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்
இந்த மாநாட்டில் படைக்கப்பட்டன.
நரேஸ் தேவதாஸ் |
செல்வா இலெட்சுமணன் |
இந்த மாநாட்டில் பேரா மாநிலத்தைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் இருவர் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரை படைத்துள்ளனர். தெலுக் இந்தான், சப்ராங் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த செல்வா இலெட்சுமணன் மற்றும் சுங்கை குருட் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் நரேஸ் தேவதாஸ் ஆகிய இருவரும் இணைந்து ‘சிறுவர் இலக்கியத்தில் செயலிகளின் பயன்பாடு’ எனும் தலைப்பிலான ஆய்வுக் கட்டுரையை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாப்பா பாவலர் முரசு நெடுமாறன், டத்தோ ஆ.சோதிநாதன் ஆகியோருடன் கட்டுரையாளர்கள் |
இளம் தமிழாசிரியர்கள் இதுபோன்ற பன்னாட்டு நிலையிலான மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரை படைப்பது பெருமைக்குரியதாகும். தாய்த்தமிழையும் இலக்கியத்தையும் அடுத்த நூற்றாண்டுக்குக் கொண்டுசெல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இளம் தமிழாசிரியர்களான இவர்கள் இருவரும் பாராட்டுக்குரியவர்கள் என்றால் மிகையில்லை.
கடந்த மே மாதம் வடமலேசிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தாக்கக் கண்காட்சியில் செல்வா இலெட்சுமணன், நரேஸ் தேவதாஸ் இருவரும் கணிதச் செயலி ஒன்றனை உருவாக்கம் செய்ததற்காகத் தங்கப் பதக்கம் வென்றது இங்குக் குறிப்பிடத்தக்கது.
அடுத்த மாநாடு எப்போது
ReplyDelete