SJK(T) LADANG GULA - 'தொல்காப்பியர் அறிவகம்' உயர்நிலைச் சிந்தனைத் திறன் வகுப்பறை திறப்புவிழா

பேரா, கிரியான் மாவட்டம், கூலாத் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தொல்காப்பியர் அறிவகம், உயர்நிலைச் சிந்தனைத் திறன் வகுப்பறை திறப்புவிழா கண்டது. பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம், முன்னாள் மாணவர் சங்கம், தோட்ட மேலாளர் ஆகியோரின் கூட்டு முயற்சியால் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.




 

இத்திறப்பு விழாவில் மாவட்ட கல்வி அதிகாரியைப் படிநிகர்த்து Pegawai SISC+ திரு.மயூடின் பின் சஹாரி அவர்கள் கலந்து சிறப்பித்தார். மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இவ்வகுப்பறையினைப் பள்ளி மாணவர்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இது போன்ற முயற்சிகள் ஒவ்வொரு பள்ளியிலும் முடுக்கிவிடப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும் பள்ளியின் ஆசிரியர்கள் சிந்தனைத் திறன் தொடர்பான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை அறிந்து வைத்திருப்பதுடன் அதனைச் சிறந்த முறையில் மாணவருக்குக் கொண்டு சேர்க்க வழிவகை காண வேண்டும் என்றார்.


 

மாணவரிடையே சிந்தனைத் திறனை மேம்படுத்தும் நோக்கில் இவ்வகுப்பில் பல்வேறு வகையான சிந்தனைத் திறன் தொடர்பான நடவடிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் தோட்ட மேலாளர் திரு.பிரபாகரன் தண்ணீர்மலை அவர்களின் முயற்சியால் மாணவர்களுக்குத் தட்டைக் கருவிகள் (Tablet) வழங்கப்பட்டன.


 



முன்னதாகப் பேசிய பள்ளியின் தலைமையாசிரியர் திரு.கோவி.சந்திரன் அவர்கள் இவ்வகுப்பறை உருவாக உழைத்த அனைத்து நன்னெஞ்சங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். மாணவர்கள் புதிய வகுப்பறைச் சூழலில் தமது அறிவாற்றலை மேம்படுத்திக் கொள்ள ஆசிரியர் பெருமக்கள் துணை புரிய வேண்டும் என்றார்.

 





பள்ளியில் மாணவரின் சிந்தனைத் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார். அவற்றுள் கூலாப் பாட்டிச் சமையல், உணவே மருந்து, எந்திரவியல் வகுப்பு, உயர்நிலைச் சிந்தனைத் திறன் வகுப்பு மாணவர் இதழ் ஆகியவை முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறினார். இந்நிகழ்ச்சியில் கிரியான் மாவட்டம், லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம், கோலா கங்சார், மாவட்டத்தைச் சார்ந்த தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும் பெற்றோர்களும் ,மாணவர்களும் கலந்து கொண்டனர்.

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

18ஆம் ஆண்டு வளர்தமிழ் விழா (பேரா மாநில நிலை)

செந்தமிழ் விழா 2018 - பேரா மாநிலத்தின் குழுவினர் பங்கேற்பு

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்