SJK(TAMIL) TUN SAMBANTHAN, BIDOR - இலண்டன் கல்விப் பரிமாற்றத்தால், முதல் நிலையை அடைந்தது
அக்டோபர் 27-ஆம் தேதி ஒரே நேரத்தில் இலண்டன் நேரப்படி காலை 10.00
மணிக்கு திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியிலும் மலேசிய நேரப்படி மாலை 5.00
மணிக்கு பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளியிலும் இந்த இணையம் வழிக்
கல்விப் பரிமாற்றத்தை முன்னிட்டு சிறப்பு அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின்
அமைப்பாளர் சுப.சற்குணன் சிறப்புரை ஆற்றினார்.
கடந்த 2015-இல் மலேசியக் கல்வி அமைச்சு உருமாற்றுப் பள்ளித்
திட்டத்தினைத் (Program Sekolah Transformasi TS25) தொடங்கியது. அதற்காக
மலேசியாவில் உள்ள 100 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில்
இடைநிலைப்பள்ளி, தேசியப்பள்ளி, சீனப்பள்ளி, தமிழ்ப்பள்ளி என 100 பள்ளிகள்
இடம்பெற்றன. மலேசியாவில் 525 தமிழ்ப்பள்ளிகள் சார்பில் பீடோர் துன்
சம்பந்தன் தமிழ்ப்பள்ளி மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டது.
Comments
Post a Comment