மலேசியக் கல்வி அமைச்சில், தமிழ்ப்பள்ளிகளுக்கான முகமை அமைப்பாளராகப் பணியாற்றி அண்மையில் பணி ஓய்வு பெற்ற சு.பாஸ்கரன் அவர்களுக்குப் பேரா மாநில அளவில் பிரியாவிடை நல்கப்பட்டது. கடந்த 24.05.2018 வியாழக்கிழமை, ஈப்போ எக்செல்சியர் தங்கும் விடுதியில் அவருக்குப் பாராட்டு நிகழ்ச்சி சிறப்புடன் நிகழ்ந்தது. கடந்த 40 ஆண்டுகளாக கல்வித்துறையில் ஆசிரியராகவும், தலைமையாசிரியராகவும், பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளராகவும் பின்னர் ஓய்வு பெறும் முன்னர் மலேசியக் கல்வி அமைச்சில் தமிழ்ப்பள்ளிகளுக்கான முகமை அமைப்பாளராகப் பணியாற்றி தம்முடைய அறுபதாவது வயதில் அவர் பணி ஓய்வு பெற்றார். நல்ல தமிழுணர்வும் தமிழ் உள்ளமும் கொண்ட சு.பாஸ்கரன் கல்வி அமைச்சில் மட்டும் 12 ஆண்டுகள் பணியற்றியுள்ளார். தம்முடைய பணிக்காலத்தில் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிலும் தமிழ்மொழி வளர்ச்சியிலும் தனிக்கவனமும் அக்கறையும் காட்டியவர். கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொது இயக்கங்கள், தலைவர்கள் என எல்லாத் தரப்பினரிடமும் சுமுகமான உறவைப் பாராட்டி அன்புடன் பழகியவர் இவர். மேலும், உயர்ந்த ...
Comments
Post a Comment