SJK(TAMIL) BULUH AKAR - தேசிய நிலையில் 2ஆம் பரிசை வென்று சாதனை

பேராக் மாநிலத்தின் பாரிட் வட்டாரத்தில் உள்ள பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி தேசிய நிலையில் இணைப்பாட நனிச்சிறந்த பள்ளியாகத் தேர்வு பெற்று இரண்டாவது பரிசை வாகை சூடியது.

தேசிய நிலையில் நாடு தழுவிய அளவில் 3071 பள்ளிகளிடையே நடத்தப்பட்ட மதிப்பீட்டில் பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளி இரண்டாவது பரிசு பெற்றிருப்பது தமிழ்ப்பள்ளிகளுக்கே பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

21 மாணவர்கள் மட்டுமே பயிலும் இப்பள்ளியின் தலைமையாசிரியர் மனஹரன் தலைமைத்துவத்திலும் இணைப்பாடத் துணைத் தலைமையாசிரியர் பிரபு ஜெயசீலனின் அருமையான முயற்சியாலும் பள்ளி ஆசிரியர்களின் ஒன்றுபட்ட உழைப்பினாலும் இந்தப் பள்ளி இணைப்பாடத் துறையில் பேரா மாநிலத்திலேயே மிகச் சிறந்த பள்ளியாகப் பெயர் பொறித்துள்ளது. ஒரு தமிழ்ப்பள்ளி இந்த அளவுக்குச் சிறந்து விளங்குவது பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளதோடு பாராட்டையும் பெற்றுள்ளது என்று இந்த வெற்றியைப் பற்றி கருத்து தெரிவித்த பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் சுப.சற்குணன் குறிப்பிட்டார்.

 

Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

SJK(TAMIL) KERUH - மின்னல் பண்பலையின் இளம் வடிவமைப்பாளர் திட்டம்

“தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை…தொடர்ச்சியில் இருக்க வேண்டும்” – முத்து நெடுமாறன் உரை

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்