தமிழ்க்கல்வி மாநாட்டில் பேரா தமிழாசிரியர்கள் மூவர் கட்டுரை படைக்கின்றனர்

மலேசியக்  கல்வி அமைச்சின் ஆதரவுடன் தமிழ் அறவாரியம், தேசிய தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் மன்றம், மலாயா தமிழ் ஆசிரியர் சங்கம், தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் இயக்கம், மலேசிய இந்தியர் விண்வெளி அறிவார்ந்தோர் கழகம் ஆகியோரின் கூட்டு ஏற்பாட்டில் மலேசியத் தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாடு 2018 நடைபெறவுள்ளது.


இந்த மாநாடு எதிர்வரும் 17 நவம்பர் 2018 காரிக்கிழமை, மலாயாப் பல்கலைக்கழக வணிக கணக்கியல் புலத்தில் காலை மணி 8:00 முதல் மாலை மணி 6:00 வரை நடைபெறவிருக்கின்றது. கல்வித் துணையமைச்சர் மாண்புமிகு திருமதி.தியோ நீ சிங் அவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு அதிகாரப்படியாகத் திறந்து வைப்பார்,

மலேசியாவில் தமிழ்க்கல்வி, தமிழ்ப்பள்ளி மற்றும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் நலன் குறித்து பல கட்டுரைப் படைப்புகள் இடம்பெறவுள்ளன.

அந்தவகையில், சிறப்புமிக்க இந்த மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை படைப்பதற்குப் பேரா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று தமிழாசிரியர்கள் தேர்வாகியுள்ளனர். 

அண்மைய காலமாகப் பேரா மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்து வருகின்ற வரிசையில் இது மேலும் ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது. தேசிய நிலையில் நடைபெறுகின்ற தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை வழங்கவுள்ள பேரா மாநிலத் தமிழாசிரியர்களின் விவரங்களைக் கீழே காணலாம்.

கமுண்டிங் சின் வா தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர் நலத் துணைத் தலைமையாசிரியர் சந்திரன் கோவிந்தன்
தைப்பிங் இந்து வாலிபர் சங்கத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் சிவபாலன் திருச்செல்வம்
பாகான் செராய், சுங்கை போகா தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் மோனேஸ் நாச்சியா ரூபிணி தியாகராஜன்

தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாட்டில் கட்டுரை படைக்கும் ஆசிரியர்கள் மூவருக்கும் பாராட்டுகள்; நல்வாழ்த்துகள் உரித்தாகட்டும். பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் முனைப்பும் முயற்சியும் மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. தமிழ்ப்பள்ளி மேம்பாட்டிலும் தமிழ்க்கல்வி வளர்ச்சியிலும் தமிழாசிரியர்களின் இதுபோன்ற பங்களிப்புகள் பராட்டுக்குரியது என்றால் மிகையன்று. 

மேலும், இந்த ஆசிரியர்களின் திறமைக்குத் தகுந்த மதிப்பளித்து மாநாட்டில் கட்டுரை படைக்க ஊக்கமும் இசைவும் வழங்கிய அப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் திரு.ப.நாகராஜா, திருமதி.இந்திராகாந்தி, திரு.சுப்பிரமணியம் ஆகிய மூவருக்கும் நன்றியும் பாராட்டும். தலைமையாசிரியர்களின் பணி மாணவர்களை முன்னேற்றுவது மட்டுமல்ல. ஆசிரியர்களின் திறமையறிந்து அதற்கேற்ப அவர்களைச் சிறப்பாக வழிநடத்துவதும் அவர்களின் வெற்றிக்கு வழிகாட்டுவதும் தலைமையாசிரியர்களின் பணிதான் என்பதற்கு இதுவொரு நற்சான்று.

பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் இந்த 2018இல் பல கருத்தரங்கம் மற்றும் மாநாடுகளில் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரை படைத்ததோடு தங்கப் பதக்கங்களும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான செய்திகளைக் கீழ்க்காணும் இணைப்புகளில் காணலாம்.

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

YOUTUBE காணொலி தமிழ்மொழிப் பாடங்கள் - பாகம் 1

மலேசிய சாதனை புத்தகத்தில் தடம் பதிக்கிறார் பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

FIND THE DIFFERENCE - வித்தியாசம் கண்டுபிடி விளையாட்டு