“தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை…தொடர்ச்சியில் இருக்க வேண்டும்” – முத்து நெடுமாறன் உரை
அக்டோபர் 27-ஆம் தேதி ஒரே நேரத்தில் இலண்டன் நேரப்படி காலை 10.00
மணிக்கு திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியிலும் மலேசிய நேரப்படி மாலை 5.00
மணிக்கு பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளியிலும் இந்த இணையம் வழியானக்
கல்விப் பரிமாற்றத்தை முன்னிட்டு சிறப்பு அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முத்து நெடுமாறன்
உரையாற்றினார்.
மூத்த இலங்கை தமிழறிஞர் அமரர் கா.சிவத்தம்பியின் வாசகமான “தமிழ்
மொழியின் பெருமை அதன் தொன்மையில் இல்லை. மாறாக அதன் தொடர்ச்சியில்தான்
இருக்கிறது” என்பதைத் தனதுரையில் மேற்கோள் காட்டி நினைவுபடுத்திய முத்து
நெடுமாறன், அதற்கேற்ப அனைவரும் தமிழ் மொழியைத் தொடர்ந்து தொழில்நுட்ப
வளர்ச்சிகளின் துணையோடு அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் எனக்
கேட்டுக் கொண்டார்.
Comments
Post a Comment