கணிதச் செயலியை உருவாக்கி பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் சாதனை



கெடா மாநிலத்திலுள்ள வடமலேசியப் பல்கலைக்கழகத்தில் (Universiti Utara Malaysia) தேசிய நிலையிலான ஆராய்ச்சி, புத்தாக்கம், செயலிக் கண்காட்சி (Innovative Research, Invention & Application Extibition 2018) நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் பேரா மாநிலத்தைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி ஆசிரியர் குழுவினர் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

மே திங்கள் 6 & 7 ஆகிய இரண்டு நாட்களுக்கு நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் தெலுக் இந்தான், சப்ராங் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் செல்வா இலெட்சுமணன், சுங்கை குருட் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் நரேஸ் தேவதாஸ், பாகான் செராய் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் சஞ்சய் குமார், ரூபனா தமிழ்ப்பள்ளி முன்னாள் ஆசிரியர் ஜீவேந்திரா பாண்டியன் ஆகிய நால்வரும் தங்களின் புத்தாக்கத்தை அறிமுகம் செய்துள்ளனர்.

மெதுபயில் மாணவர்களுக்கான கணித மின்னூல் செயலி ஒன்றனை இவர்கள் உருவாக்கி சாதனை செய்துள்ளனர். இந்தப் புத்தாக்கத்திற்குத் தான் இவர்களுக்குத் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மொத்தமாக 225 குழுக்கள் பங்கேற்ற இக்கண்காட்சியில் கலந்துகொண்ட தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஒரே குழுவினராக இவர்கள் பாராட்டைப் பெற்றுள்ளனர்.




கணிதப் பாடம் தொடர்பான செயலியை உருவாக்கி தேசிய நிலையில் தங்கப் பதக்கம் வென்று மகத்தான சாதனை செய்திருக்கும் செல்வா இலெட்சுமணன், நரேஸ் தேவதாஸ், சஞ்சய் குமார், ஜீவேந்திரன் பாண்டியன் ஆகிய நான்கு ஆசிரியர்களும் தமிழ்ப்பள்ளிகளுக்குப் பெருமை சேர்த்துள்ளனர் என்றால் மிகையாகாது.


Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

SJK(T) LDG.GULA – ‘தேன்சிட்டு’ மாணவர் இதழ் வெளியீடு

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

பாவாணம் மின் நாள் பாட த்திட்டத்தினை உருவாக்கி ஆசிரியர்கள் சாதனை

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]