பேரா, மலேசியா – இலண்டன் தமிழ் ஆசிரியர்கள் இணையம் வழி கற்பித்தலில் இணைகின்றனர்.
பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி வலையரங்கக் கல்விக்குழு ஆசிரியர்கள் இலண்டனில் உள்ள தமிழ் ஆசிரியர்களுக்கு இணையம் வழி கற்றல் கற்பித்தல் பயிற்சி வழங்கவுள்ளனர். இலண்டன் சோயசு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை இதனை ஏற்பாடு செய்துள்ளது. இலண்டன் மாநகரில் ஏறக்குறைய 200 தமிழ்ப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தன்னார்வ ஆசிரியர்களால் நடத்தப்படுகின்றன. தற்போது இலண்டனிலும் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நடப்பில் உள்ளது. அதனால், மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழ்நிலை. இதேபோல, நம் மலேசியாவில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருந்த காலத்தில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் வீட்டிருந்தே இல்லிருப்புக் கற்றல் முறைகளை இணையம் வழி மேற்கொண்டனர். அந்த வகையில், பேராக் தமிழ்ப்பள்ளி வலையரங்கக் கல்விக்குழு ஏற்பாட்டில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ‘இயங்கலை பயில்களம்’ என்ற பெயரில் இணையம் வழி பயிற்சிகள் நடத்தப்பட்டன. மேலும், மின்கற்றல் துணைப்பொருள் அறிவார்ந்த பகிர்வு, தமிழ்ப்பள்ளிகளின் நனிச்சிறந்த நடைமுறை என்ற தலைப்பில் இயங்கலையில் பல்வேறு பயிற்சிகளைத் தமிழ்ப்...
Comments
Post a Comment