தேசியநிலை மலாய் நாடகப் போட்டியில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்

தேசிய நிலை மலாய் நாடகப்  (Pertandingan Teater Bahasa Malaysia Peringkat Kebangsaan 2018) போட்டியில், பேரா சுங்கை சிப்புட், மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்துகொணடனர். தேசிய கலை பண்பாட்டுத் திணைக்களத்தின் (JABATAN KEBUDAYAAN DAN KESENIAN NEGARA) ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்ச்சி மலேசிய சுற்றுலா அமைச்சு, மலேசிய கல்வி அமைச்சு ஆகிய இரண்டு அமைச்சுகளின் முழு அதரவோடு நடத்தப்பட்டது.

கடந்த 25-03-2018 ஞாயிற்றுக்கிழமை ஈப்போவில் நடைபெற்ற இப்போட்டியில் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 10 மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளியின் ஆசிரியர்கள் கவிதா மணியம், சுரேன் ராவ் ஆகிய இருவரும் பொறுப்பாசியராக இருந்து மாணவர்களைச் சிறப்பாகப் பயிற்றுவித்தனர்.


தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இவ்வகையான போட்டிகளில் பங்கெடுப்பது பாராட்டுக்குரியதாகும். தமிழ்ப்பள்ளி மாணவர்கள் திறமைசாளிகள்; எந்தத் துறையிலும் சிறப்பாக ஈடுபடக்கூடியவர்கள் என்பதை மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.

2018ஆம் ஆண்டுக்கான இந்தத் தேசிய போட்டி மாநில வாரியாக நடைபெற்று முடிந்த பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும். மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இந்தப் போட்டியில் வெற்றிபெற்று தேசிய நிலையில் பரிசு பெற நம்முடைய வாழ்த்துகளை வழங்குவோம்.






Comments

Popular Posts:-

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - NEGERI SELANGOR

வெள்ளி மலர் 3 [Velli Malar Mac 2019]

அனைத்துலக மாணவர் முழக்கம் 2021 - முதல் மற்றும் இரண்டாம் நிலையில் மலேசியாவுக்கு இரட்டை வெற்றி