18ஆம் ஆண்டு வளர்தமிழ் விழா (பேரா மாநில நிலை)

வளர்தமிழ் விழா 18ஆவது ஆண்டாகப் பேரா மாநில நிலையில் 10.3.2018ஆம் நாள், ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளியில் மிகவும் கோலாகலமாகவும் தமிழ்ப் பண்பாட்டு அடையாளத்துடனும் நடைபெற்றது.

மஞ்சோங் மாவட்டத் தலைமையாசிரியர் மன்றத்தின் சார்பில் தலைமையாசிரியர் திரு.ஏ.ஆறுமுகம் அவர்களின் தலைமையில் மஞ்சோங் மாவட்டத் தலைமையாசிரியர்கள் அனைவரும்  இவ்விழாவினைப் பொறுப்பேற்று நடத்தினார்கள்

நாடாளுமன்ற மேலவைத் தலைவரும், ம.இ.கா தேசிய உதவி தலைவருமாகிய மாண்புமிகு தான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ ச.விக்னேஷ்வரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவினை அதிகாரப்படியாகத் தொடக்கிவைத்தார். மேலும் தம்முடைய நன்கொடையாகப் பத்தாயிரம் வெள்ளி (RM10,000.00) வழங்கினார்.

மலேசியக் கல்வி அமைச்சிலிருந்து தமிழ்ப்பள்ளிகளின் முகமை அமைப்பாளர் திரு.பாஸ்கரன் சுப்பிரமணியம் அவர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்புறை ஆற்றினார்.

பேரா மாநிலக் கல்வித் திணைக்களத்திலிருந்து தமிழ்மொழி உதவி இயக்குனர் திரு.ந.சந்திரசேகரன் அவர்களும் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் திரு.சுப.சற்குணன் அவர்களும் வருகையளித்தனர்.

மாணவர்கள், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், முன்னாள் தலைமையாசிரியர்கள், சிறப்புப் பெருமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம் ஒட்டுமொத்த வெற்றிக் குழுவாகத் தேர்வுபெற்று சுழற்கிண்ணத்தை வென்றது.



மாண்புமிகு தான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ ச.விக்னேஷ்வரன் அவர்கள்
திரு.ஏ.ஆறுமுகம் அவர்கள்
திரு.பாஸ்கரன் சுப்பிரமணியம்


பண்பாட்டு நடனம் வழங்கிய முக்கிம் புண்டுட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்


திரு.ஏ.ஆறுமுகம் - திரு.ந.சந்திரசேகரன் - திரு.பாக்கியநாதன்

திரு.சுப.சற்குணன் அவர்கள்





ஒட்டுமொத்த வெற்றிக்குழுவுக்கான சுழற்கிண்ணம் பெறுகிறார் திரு.அண்ட்ரூ அவர்கள்
லாருட் மாத்தாங் செலாமா மாவட்டப் போட்டியாளர்களும் ஆசிரியர்களும்








2019ஆம் ஆண்டின் வளர்தமிழ் விழா ஏற்பாட்டுக்குழுத் தலைவர் திரு.கணேசன் அவர்கள்



மஞ்சோங் மாவட்டத் தலைமையாசிரியர்கள்

Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

KPM - கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பாடங்கள்

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்