பேராவில் 7 தமிழ்ப்பள்ளிகளில் '21ஆம் நூற்றாண்டு வகுப்பறை'

பேரா மாநிலத்தில் உள்ள 7 தமிழ்ப்பள்ளிகளில் '21ஆம் நூற்றாண்டு வகுப்பறை' (21st Century Classroom) அமைப்பதற்கு மலேசியக் கல்வி அமைச்சு மானியம் வழங்கியுள்ளது.

மலேசியா முழுவதும் 50 தமிழ்ப்பள்ளிகளில் இந்த '21ஆம் நூற்றாண்டு வகுப்பறை' உருவாக்கபடவுள்ளது. அவற்றுள், பேராவில் உள்ள 7 தமிழ்ப்பள்ளிகளும் அடங்கும்.

27.03.2018 செவ்வாய்க்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வித் துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் கலந்துகொண்டு பள்ளிகளுக்கான மானியத்தை வழங்கினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றும் டத்தோ ப.கமலநாதன்
தமிழ்ப்பள்ளிகளில்  '21ஆம் நூற்றாண்டு வகுப்பறைகள்' அமைக்கப்படுவதும் மாணவர்கள் 21ஆம் நூற்றாண்டுக் கற்றல் திறன்களைக் (21st Century Learning Skills) கற்றுக்கொள்வதும் இன்றைய காலக்கட்டத்தின் கட்டாயத் தேவையாகும். இதனை உறுதிபடுத்தும் வகையில் மலேசியாவில் 50 தமிழ்ப்பள்ளிகள் விரைவில் திறன் வகுப்பறைகள் (Smart Classroom) அமைக்கபட உள்ளன.

இந்நிகழ்ச்சியில் மானியம் பெற்றுக்கொண்ட பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகள்:-

அரசினர் தமிழ்ப்பள்ளி, ஈப்போ - தலைமையாசிரியர் திரு.முனுசாமி
தாப்பா தமிழ்ப்பள்ளி - தலைமையாசிரியர் திருமதி.வனஜா
தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளி - தலைமையாசிரியர் திருமதி சுந்தரி
மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி, சு.சிப்புட் - தலைமையாசிரியர் திருமதி.சாந்தகுமாரி
சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி, தெலுக் இந்தான் - தலைமையாசிரியர் திரு.கணேசன்
மகிழம்பூ தமிழ்ப்பள்ளி, ஈப்போ - தலைமையாசிரியர் திருமதி.மாரியம்மா
கிளேபாங் தமிழ்ப்பள்ளி, சிம்மோர் - தலைமையாசிரியர் திருமதி.பத்மினி




மேலும், 21ஆம் நூற்றாண்டு வகுப்பறைக்கான மானியத்தைப் பெற்றுக்கொண்ட 50 தமிழ்ப்பள்ளிகளைக் கீழே உள்ள படத்தில் காணலாம்.


21ஆம் நூற்றண்டுக் கற்றல் சூழலைத் தமிழ்ப்பள்ளிகளில் உருவாக்குவதன் மூலம் நமது மாணவர்களின் கல்வித் தரம் உயரும் என எதிர்பார்க்கலாம். எல்லாத் தமிழ்ப்பள்ளிகளிலும் இதுபோன்ற திறன் வகுப்பறைகள் விரைவில் உருவாக வேண்டும். இதன் வாயிலாகத் தமிழ்ப்பள்ளிகள் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும். நமது மாணவர்கள் பெரும் பயன்களை அடைய வேண்டும்.


Comments

Popular Posts:-

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

KPM - கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பாடங்கள்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]