கிரியானில் தமிழ் நளிநயப் பாடல் (Action Song) போட்டி


கடந்த மார்ச்சு 30 முதல் ஏப்ரல் 1 வரை பேரா, கிரியான் மாவட்டத்தில் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் கல்விப் பெருவுலா நிகழ்ச்சி நடைப்பெற்றது. மலேசியக் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ மாட்சீர் காலிட் இந்தக் கல்விப் பெருவுலா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிகாரப்படியாகத் தொடக்கிவைத்தார்.


இந்தப் பெருவுலா நிகழ்ச்சியின் ஓர் அங்கமாகக் கிரியான் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளுக்காக நளிநயப் பாடல் போட்டி (Action Song) நடைபெற்றது. இப்போட்டி தமிழ்மொழியில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கிரியான் மாவட்டத்தைச் சேர்ந்த 11 தமிழ்ப்பள்ளிகள் இப்போட்டியில் பங்கெடுத்தன. ஒவ்வொரு பள்ளியும் மிகவும் சிறப்பான முறையில் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தி பொதுமக்களின் பாராட்டை அள்ளிக் குவித்தன.

முதல் பரிசு - செயிண்மேரி தமிழ்ப்பள்ளி

 
இரண்டாம் பரிசு - செர்சோனீசு தமிழ்ப்பள்ளி
மூன்றாம் பரிசு - ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி





வெற்றிக் குழு -  செயிண்மேரி தமிழ்ப்பள்ளி
கிரியான் மாவட்டத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் மன்றத்தின் தலைவர் ஆர்.பி.ஜெயகோபாலன் இப்போட்டிக்கான ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்பட்டார்.

பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் சுப.சற்குணன், இசைக்கல்வி ஆசிரியர் சக்கரவர்த்தி, தனியார் சங்கீத ஆசிரியர் கிருஷ்ணன் பெருமாள் ஆகியோர் போட்டியின் நடுவர்களாகப் பணியாற்றினர்.

ஆர்.பி.ஜெயகோபாலன் - கிருஷ்ணன் பெருமாள் - சுப.சற்குணன் - சக்கரவர்த்தி

பாகான் செராய் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் மங்களநாயகி நிகழ்ச்சி நெறியாளராகப் பணியாற்றினார். 

கிரியான் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என 300க்கும் அதிகமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தமிழில் நளியப் பாடல் போட்டி நடத்தியதன் மூலம் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கலைத்திறன் மிளிர்வதற்கான மேலும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது எனலாம்.
 

Comments

  1. சிறப்பான செயல். இதுபோன்ற நிகழ்ச்சிகள் மாணவர்களின் திறனை அதிகரிக்கும்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

YOUTUBE காணொலி தமிழ்மொழிப் பாடங்கள் - பாகம் 1

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

மலேசிய சாதனை புத்தகத்தில் தடம் பதிக்கிறார் பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - DAERAH KINTA UTARA