SJK(T) LADANG CHANGKAT KINDING - எந்திரவியல் புத்தாக்கப் போட்டியில் இரட்டை வெற்றி

கடந்த 25.08.2019 (ஞாயிறு)  பேரா மாநில நிலை  எந்திரவியல் புத்தாக்கப் போட்டி (PERTANDINGAN ROBOTICS PERINGKAT NEGERI PERAK) ஈப்போவில் நடைபெற்றது. மலேசியக் கல்வி அமைச்சின் ஆதரவுடன் சஸ்பாடி நிறுவனம் இந்தப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. 



இப்போட்டியில் பேரா, தஞ்சோங் ரம்புத்தான், சங்காட் கிண்டிங் தோட்டத்  தமிழ்ப்பள்ளி கலந்துகொண்டு வெங்கலக் கேடயமும் (STATE LEVEL BRONZE AWARD) சிறந்த படைப்பாளர் விருதையும் (STATE LEVEL OPEN CATEGORY BEST PRESENTATION AWARD) வென்றது. இந்தப் போட்டியில்  8 பள்ளிகள் கலந்துகொண்ட வேளையில், பேரா மாநில நிலையில்  கலந்துகொண்ட ஒரே  தமிழ்ப்பள்ளி, சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் பங்கெடுத்த மாணவர்கள் கீர்த்தனா குணசேகரன் (ஆண்டு 6), நிஷாந்தன் தியாகராஜன் (ஆண்டு 6), நிறைமதியன் முரளிதரன் (ஆண்டு 5) ஆகியோர் இந்த வெற்றிக்கு உரியவர்கள். இப்பள்ளி ஆசிரியர்கள் திரு.சிவம், திருமதி.புனிதா, திருமதி.ஜீவா, சிறப்புப் பயிற்றுநர் திரு.ஆனந்த் மற்றும் திரு.கோமளன் ஆகியோர் மாணவர்களைச் சிறப்பாகப் பயிற்றுவித்து இவ்வெற்றிக்கு வழிவகுத்தவர்கள்.



இலகுவான மற்றும் பாதுகாப்பான வகுப்பறை நாற்காலியின் பயன்பாடு (SMART SAFETY SCHOOL CHAIR) எனும் கருப்பொருளைக்  கொண்டு மாணவர்கள் இந்தப் புத்தாக்கத்தை உருவாக்கியுள்ளனர்.     

[காணொலி]

 சங்காட் கிண்டிங் தோட்டத்  தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நமது  பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும் உரித்தாகட்டும். 

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SJK(T) LADANG KAMPAR - INoDEx 2021 புத்தாக்கப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வாகை சூடியது

செந்தமிழ் விழா 2018 - பேரா மாநிலத்தின் குழுவினர் பங்கேற்பு

SJK(T) KHIR JOHARI, TAPAH ROAD - இந்தியாவிலிருந்து கல்வியாளர் குழு அதிகாரப்படியான வருகை

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

SJK(TAMIL) ST.PHILOMENA CONVENT,IPOH - 2 சகோதரிகள் தங்கப் பதக்கம் வென்று சாதனை