மலேசிய சாதனை புத்தகத்தில் தடம் பதிக்கிறார் பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்
பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார்கள் என்றால் அது மிகையாகாது. அந்த வகையில், சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி ஆசிரியரான சுரேன் ராவ் கற்றல் கற்பித்தல் மூலம் மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெறவுள்ளார்.
எதிர்வரும் 21.08.2019ஆம் தேதி காலை 8.00 மணி தொடங்கி இரவு 8.00 மணி வரை மாணவர்களுக்குத் தமிழ்மொழிப் பாடத்தைக் கற்பிப்பதன் மூலம் இந்தச் சாதனையைப் புரியவிருக்கிறார். முதலாம் ஆண்டு தொடங்கி ஆறாம் ஆண்டு வரை சுமார் 300 மாணவர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.
3 ஆண்டுகள் அப்பள்ளியில் தமிழ்மொழி மற்றும் உடற்கல்வி பாடங்களைக் கற்பித்து வரும் சுரேன் ராவ் மாணவர்களைப் பல போட்டிகளுக்கு அழைத்துச் செல்வதில் ஆர்வம் கொண்டவர். ஓட்டப்பந்தயம், வளர்தமிழ் விழா, பாடல் போட்டி உட்பட பல போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமைத் தேடித் தந்துள்ளார். அதோடு அனைத்துலக கற்றல் புத்தாக்கப் போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
12 மணிநேரம் இடைவிடாத கற்றல் கற்பித்தலுக்குப் பின்னர் இரவு 8.30 நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்வில் பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ.சிவநேசன், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் சு.கேசவன், கல்வி துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் அப்துல் அஜீஸ் பாரி உட்பட மேலும் பல பிரமுகர்கள் கலந்து கொள்வர்.

Comments
Post a Comment