SJK(T) KHIR JOHARI, TAPAH ROAD - இந்தியாவிலிருந்து கல்வியாளர் குழு அதிகாரப்படியான வருகை
27.08.2019 –ஆம் நாள் பேரா, பத்தாங் பாடாங் மாவட்டம், தேசிய வகை கீர் ஜொஹாரி தமிழ்ப்பள்ளிக்கு இந்திய கல்வியாளர் திட்டத்தின் கீழ் அறுவர் கொண்ட குழு இந்தியாவிலிருந்து அதிகாரப்படியான வருகை மேற்கொண்டனர்.
இந்தியா மஹாராஷ்டிரா, பெங்களூரு மற்றும் குஜராத் மாநிலங்களைப் பிரதிநிதித்து இக்கல்வியாளர்கள் வந்திருந்தனர். வருகை புரிந்த பேராசிரியர், பள்ளியின் முதல்வர், அனைத்துலக கணித ஆசிரியர், இந்திய அரசாங்க நிகராளி, பொருளக மற்றும் காப்புறுதிச் சேவையாளர்கள் அடங்கிய இந்தக் குழுவினரைப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு.தியாரன், துணைத்தலைமை ஆசிரியர்கள் அனைவரும் இன்முகத்துடன் வரவேற்றனர்.
மலேசியாவில் தொடக்கப் பள்ளிகளின் கற்றல் கற்பித்தல் முறைகளைத் தெரிந்து கொள்ள வந்தவர்களுக்குப் பாலர் பள்ளி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் முறைகள் விளக்கப்பட்டன. மேலும் அவர்களுக்குப் பாலர் பள்ளி மாணவர்களின் வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் முறைகளும் நேரடியாக காண்பிக்கப்பட்டு தெளிவான விளக்கங்களைப் பாலர் பள்ளி ஆசிரியர் மற்றும் துணைத்தலைமையாசிரியர்களும் அளித்தனர். அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினர். தவிர, படிநிலை ஒன்று மாணவர்களின் கற்றல் கற்பித்தல் முறைகளையும் பார்த்தனர்.
மலேசிய நாட்டின் கல்வித் திட்டத்தின் கீழ் தற்போதைய 21 ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தல் முறைகளும் அவர்களுக்கு விளக்கப்பட்டன. வருகையாளர்களுடனான கலந்துரையாடலில் பள்ளியின் தலைமையாசிரியரும் துணைத்தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலில் மஹாராஷ்டிரா மாநிலப் பள்ளியின் முதல்வர் அவர்களின் ஆரம்ப கல்வி கற்பித்தல் முறைகளையும், அவர்கள் சிறார் பாதுகாப்புக் கல்வி முறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறினார். நமது கல்வி அணுகுமுறைகள் அவர்களுடைய கல்வி முறையோடு மாறுபட்டிருந்தாலும் அடிப்படையில் நோக்கம் ஒன்றாக இருப்பதாகக் கூறினார். மேலும் பெங்களூரைச் சார்ந்த அனைத்துலக கணித ஆசிரியர் இந்திய நாட்டின் கல்வி முறையைப் பற்றி கூறினார்.

வருகை புரிந்த கல்வியாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பான வரவேற்புக்கு நன்றி கூறினர். பள்ளியின் அமைப்பு, மாணவர்களின் இன்முகம், மரியாதையான பண்பு மற்றும் நேர்த்தியான தலைமைத்துவத்தின் வெளிப்பாட்டினைப் பாராட்டினர்.
Comments
Post a Comment