கிரியான் தமிழ்ப்பள்ளிகளின் திடல்தடப் போட்டி

28.04.2018 சனிக்கிழமையன்று கிரியான் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான திடல்தடப் போட்டி 2018 சிறப்புற நடந்தேறியது. நிபோங் திபால் , திரான்ஸ் கிரியானில் உள்ள மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத் திடலில் இப்போட்டி நடந்தது. கிரியான் மாவட்டத் தலைமையாசிரியர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த இப்போட்டியில் 14 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 158 மாணவர்களும் 80 ஆசிரியர்களும் உள்பட ஏறக்குறைய 300 பேர் கலந்துகொண்டனர். கிரியான் மாவட்டக் கல்வி அதிகாரி துவான் ஹஜி அப்துல் வாஹிட் பின் ரம்லி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இப்போட்டியை அதிகாரப்படியாகத் திறந்து வைத்தார். அவர்தம் உரையில் , இந்தப் போட்டியை வெகுச் சிறப்பாக ஏற்பாடு செய்த தலைமையாசிரியர் மன்றத்தையும் அதன் தலைவர் ஆர்.பி.ஜெயகோபாலனையும் பாராட்டினார். மேலும் , தமிழ்ப்பள்ளிகள் சிறந்த முறையில் முயற்சி மேற்கொண்டு நிகழ்ச்சிகளை நடத்துவது பெருமையளிப்பதாகக் கூறினார். நிறைவு விழாவில் கலந்துகொண்ட பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் சுப.சற்குணன் , பேரா மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையில் திடல்தடப் போட்டிய...