SJK(T) ST.THERESA'S CONVENT - DIIID JOHOR 2020 புத்தாக்கப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்கள்
கடந்த 27.08.2020ஆம் நாள் ஜோகூர் மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட 3வது அனைத்துலக அளவிலான இலக்கவியல் புத்தாக்க வடிவமைப்பு போட்டியில் (3rd Digitalized International Invention, Innovation and Design UITM Johor 2020) தைப்பிங், செயின்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இரு புத்தாக்கப் படைப்புகளை படைத்து, தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்கள் பெற்று வெற்றி வாகை சூடி சாதனைப் படைத்துள்ளனர்.
முதல் குழுவினர் வாகனம் ஓட்டும் தருணத்தில் ஏற்படும் சோர்வு நிலையைப் போக்க மூலிகை வழியில் அமைந்த நிவாரண யுத்தியை மாணவர்கள் பிரவின் லோகநாதன், பூவன் சுகுமாறன், கவினா ஸ்ரீ சங்கர் மற்றும் அவினாஷ் மனோகரன் ஆகியோர் படைத்தனர். இவர்களின் படைப்பு சிறந்த படைப்பாக அமைந்து தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தனர்.
இரண்டவது குழுவில் மாணவர்கள் தமிழ்ச்செல்வன் கனகநாதன், தான்யலெட்சுமி விக்னேஸ்வரன், மேத்ரா கணேசன் மற்றும் தயகுமரன் விக்னேஸ்வரன் ஆகியோர் தீடீர் வெள்ளப் பாதிப்புகளைக் குறைக்கும் வழிவகைகக்கான எச்சரிக்கை கருவியினை வடிவமைத்து படைத்தனர். இவர்களின் படைப்பும் நீதிபதிகளின் அங்கீகாரத்தைப் பெற்று வெண்ககலப் பதக்கத்தை வென்றனர் .
அனைத்துலக நிலையில் தொடர்ச்சியாகச் சாதனை படைத்துவரும் செயின்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் அவர்களைச் சிறப்பாகப் பயிற்றுவித்த ஆசிரியர்களும் இவர்களை வழிநடத்தும் தலைமையாசிரியர் திருமதி கி.புவனேஸ்வரி அவர்களும் பாராட்டுக்கு உரியவர்கள் எனில் மிகையில்லை.
"வெள்ளி மாநிலம்; வெற்றி மாநிலம்"
Comments
Post a Comment