SJK(T) Daerah LMS - கற்றல் கற்பித்தல் அறிவார்ந்த பகிர்வு பட்டறை

லாருட் மாத்தாங் செலாமா மாவட்டத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் ஏற்பாட்டில், கடந்த 12.09.2020ஆம் நாள் ஆசிரியர்களுக்கான கற்றல் கற்பித்தல் அறிவார்ந்த பகிர்வு பட்டறை [Bengkel Perkongsian Pintar PdPc SJK(T) Daerah Larut Matang dan Selama] சிறப்புடன் நடந்தது.

 


லாருட் மாத்தாங் செலாமா மாவட்டத்தில் உள்ள 17 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 32 தமிழ்மொழி ஆசிரியர்கள் மற்றும் 14 தலைமையாசிரியர்கள் இந்தப் பட்டறையில் கலந்துகொண்டனர்.

பட்டறையில் நடைபெற்ற பகிர்வுகளின் விவரம்:-

 1.திட்ட அடிப்படையிலான கற்றல் [Project Based Learning]

பயிற்றுநர் : திரு.முத்தரசன் செல்லையா, லாருட் மாத்தாங் செலாமா மாவட்டக் கல்வி அலுவலக அதிகாரி


 
2.தலைகீழ் வகுப்பு [Flipped Classroom]

பயிற்றுநர் ஆசிரியர் திரு.சிவபாலன் திருச்செல்வம், இந்து வாலிப சங்கத் தமிழ்ப்பள்ளி, தைப்பிங்

 


3.நேரலைப் பயிற்சித்தாள் [Live Worksheets]

பயிற்றுநர் : ஆசிரியர் திருமதி ஶ்ரீதேவி, தைப்பிங் இரப்பர் தோட்டத் தமிழ்ப்பள்ளி                                                            


லாருட் மாத்தாங் செலாமா மாவட்டக் கல்வி அலுவலகத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த அறிவார்ந்த பகிர்வு பட்டறை ஆசிரியர்களுக்கு மிகவும் பயனாக அமைந்திருந்தது.

 


லாருட் மாத்தாங் செலாமா மாவட்டத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் தலைவர் திருமதி இராதை மருதமுத்து தலைமையில் நடந்த இந்தப் பட்டறையில் அதன் செயலாளர் திருமதி.புனிதா சுப்பிரமணியம் நெறியாளராகப் பணியாற்றினார்.

Comments

Popular Posts:-

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - NEGERI SELANGOR

வெள்ளி மலர் 3 [Velli Malar Mac 2019]

அனைத்துலக மாணவர் முழக்கம் 2021 - முதல் மற்றும் இரண்டாம் நிலையில் மலேசியாவுக்கு இரட்டை வெற்றி