SJK(T) LDG.SUNGAI WANGI II -இந்தோனேசியா புத்தாக்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்

கடந்த 17.09.2020 முதல் 19.09.2020 இந்தோனேசியாவில் புத்தாக்கம் மற்றும் புனைவாக்கப் போட்டி [i3F Indonesia Invention Innovation Festival 2020] நடந்தது. பேரா, மஞ்சோங் மாவட்டம், சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஐவர் இந்த அனைத்துலகப் போட்டியில் மிகச் சிறந்த சாதனை படைத்துள்ளனர்.

Kumpulan Murid SJKT Ldg.Sungai Wangi II , Sitiawan menang Pingat Perak & Best Presentation Award dalam Pertandingan i3F Indonesia Invention Innovation Festival 2020 yang berlangsung atas talian pada 17.09.2020 hingga 19.09.2020.

இயங்லையில் நடந்த இப்போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் [SILVER AWARD]  சிறந்த படைப்பாற்றலுக்கான [BEST PRESENTATION AWARD] விருதையும் ஒருசேர வென்று சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலக அரங்கில் சாதனையாளர்களாக உருவாகியுள்ளனர்.


அறிவியல் கண்டுபிடிப்பு, படைப்பாற்றல் திறன், மொழி ஆளுமை என புதிய பரிணாமத்தில் 3 நாட்கள் இப்போட்டி நடைபெற்றது. இணையம் வழி புதிய கோணத்தில் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கும் [THE FIRST VIRTUAL INVENTION EXHIBITION]  முற்றிலும் புதுமையான இப்போட்டியில் மலேசியாலிலிருந்து கலந்து கொண்ட ஒரே தமிழ்ப்பள்ளி என்ற பெருமையையும் இவர்கள் பெற்றுள்ளனர்.


இந்தச் சாதனை மாணவர்களுக்கும், அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி ந.கமலாசெல்வி அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும்.

"வெள்ளி மாநிலம்; வெற்றி மாநிலம்"

Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

SJK(T) LDG.GULA – ‘தேன்சிட்டு’ மாணவர் இதழ் வெளியீடு

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

பாவாணம் மின் நாள் பாட த்திட்டத்தினை உருவாக்கி ஆசிரியர்கள் சாதனை

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]