SJK(T) GERIK - STEM புத்தாக்கப் போட்டியில் முதல் பரிசு

பேரா  மாநிலம், மேல் பேரா மாவட்டம்,  கிரீக் குழுவகத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தேசிய நிலை அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், கணிதப் புத்தாக்கப் போட்டியில் (National STEM Innovation Carnival 2019) கலந்துகொண்டு முதல் பரிசை வென்று சாதனை படைத்தனர். இந்த வெற்றிக்கான பரிசாக மாணவர்களுக்கு RM300.00  (முந்நூறு வெள்ளி), பதக்கம், நற்சான்றிதழ் ஆகியன வழங்கப்பட்டன.


இந்தப் போட்டி கடந்த 29.08.2019ஆம் நாள், ஈப்போவில் உள்ள உங்கு ஓமார் தொழிக்கல்விக் கழகத்தில் நடந்தது. ஹரிஷ் கென்னடி, ரூஹன் ராம்குமார், மதன் நேசன்ராஜ் சிவநேசன் ஆகிய 3 மாணவர்கள் இந்தச்  சானையைச் செய்துள்ளனர். ஆசிரியர் செல்வி சர்வினா குணசீலன் மாணவர்களைச் சிறப்பாகப் பயிற்றுவித்து போட்டிக்காக அணியப்படுத்தியுள்ளார்.

பள்ளியின் தலைமையாசிரியர் திரு.பாலசந்திரன் மாணவர்களுக்கு ஊக்கமூட்டுவதற்காக உடன் வந்திருந்தார். 


கிரீக் குழுவகத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளும் பாராட்டுகளும். 

Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

KPM - கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பாடங்கள்

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி