SJK(T) CHETTIARS. IPOH - புத்தாக்க ஆடை அலங்காரப் போட்டியில் இரண்டாம் பரிசு


கடந்த 24.08.2019, சனிக்கிழமை ஈப்போ ஏ.யி.ஓன் ஸ்டேசன் 18 பேரங்காடியில் தேசிய அறிவியல் வாரம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஈப்போ செட்டியார் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த பாலர் பள்ளி மாணவியான  செல்வி தனுசியா த/பெ ரவீந்திரன் (வயது 6) பேரா மாநிலத்தின் நிகராளியாக அறிவியல் நவீன புத்தாக்க ஆடை அலங்காரப் போட்டியில் பங்கெடுத்துக் கொண்டு இரண்டாம் நிலையில் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.  

Adik Taanusiya a/p Ravindran murid Prasekolah SJK(T) Chettiars, Ipoh menang Hadiah Naib Johan dalam Pertandingan Beragam Bertemakan Sains & Futuristik sempena Minggu Sains Negera 2019

இந்த ஆடை நெகிழி கரண்டிகள், உணர்வறிக் கருவி (Sensor) மற்றும் குறுவட்டுகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. அனைவரையும் ஈர்த்த இவ்வுடையில் உள்ள சென்செர் கருவியின் மூலம் பெண் பிள்ளைகள் காணாமல் போனால் உடனுக்குடன் பெற்றோர்கள் கைப்பேசியின் மூலம் அறிந்து கொண்டு தங்கள் பிள்ளைகளைக் காப்பாற்ற முடியும் என்பதனை  மையமாகக் கொண்டு இவ்வுடையை வடிவமைத்து உள்ளனர்.  இந்தப் புத்தாக்க ஆடையை வடிவமைத்த பாலர் பள்ளி ஆசிரியரான திருமதி மேபேல் மற்றும் தனுசியாவின் பெற்றோர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன. 



மேலும், செட்டியார் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியரான திருமதி ரெ.பச்சையம்மாள் அவர்கள் மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளுக்குச் செல்லக் கூடிய ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உற்சாகமும் ஒத்துழைப்பும் அளித்து வருவதால் இம்மாதிரியான வெற்றிகள் பள்ளிக்குக் குவிகின்றன என்று கூறினால் அது மிகையாகாது.


Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

முகமை அமைப்பாளர் பாஸ்கரன் அவர்களுக்குப் பிரியாவிடை

SJK(T) ARUMUGAM PILLAI - அனைத்துலக இளம் அறிவியலாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கம்