SJK(TAMIL) GERIK - இளம் வடிவமைப்பாளர் பட்டறை

கிரிக் குழுவகத் தமிழ்ப்பள்ளி மலேசிய வானொலி மின்னல் பண்பலையுடன் இணைந்து இளம் வடிவமைப்பாளர் பட்டறையை வெகுச்சிறப்புடன் நடத்தியது. கடந்த 5 – 6 அக்டோபர் 2018 ஆகிய இரண்டு நாட்கள் இந்தப் பட்டறை நடந்தது.




முனைவர் வேலு, தலைமையாசிரியர் திருமதி இராஜம்பாள்

முதல் நாளன்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்ட வேளையில், மறுநாள் மாணவர்களுக்குப் பட்டறை நடத்தப்பட்டது. வடிவமைப்புத் துறையில் நிபுணத்துவம் பெற்ற புத்ரா பல்கலைக்கழக விரிவுரையாளர் முனைவர் வேலு பெருமாள் இந்தப் பட்டறையை செவ்வனே வழிநடத்தினார்.

ஆசிரியர்களும் பெற்றோர்களும்


பெற்றோர்கள்
மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோர்களுக்கும் வடிவமைப்பு பற்றிய விழிப்புணர்வைக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பெற்றது என்று பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.இராஜம்பாள் கூறினார்.


மேலும், மின்னல் பண்பலையின் அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சியினை வழிநடத்தியதோடு மாணவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்கள். செல்லமே செல்வமே வானொலி நிகழ்ச்சிக்காக மாணவர்களின் நேர்க்காணலும் படைப்புகளும் பதிவு செய்யப்பட்டன.


Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

ORIGAMI காகிதச் சிற்பக்கலை செய்து மகிழ்வோம்

“தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை…தொடர்ச்சியில் இருக்க வேண்டும்” – முத்து நெடுமாறன் உரை

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

பேரா, மலேசியா – இலண்டன் தமிழ் ஆசிரியர்கள் இணையம் வழி கற்பித்தலில் இணைகின்றனர்.

பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் குமரன், தமிழ்மணி இருவருக்கும் தங்க விருது

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

FIND THE DIFFERENCE - வித்தியாசம் கண்டுபிடி விளையாட்டு