SJK(T) LDG.BATAK RABIT - மாணவர் முழக்கம் போட்டியில் நவஶ்ரீ குகநாத் முதல் பரிசு

மாணவர் முழக்கம் 2020 இறுதிப் போட்டியில் பேரா, கீழ்ப்பேரா மாவட்டம், பாத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவன் நவஶ்ரீ குகநாத் முதல் பரிசை வென்று சாதனை செய்துள்ளார்.

Adik Navasri Guganath dari SJK(T) Ldg.Batak Rabit, Daerah Hilir Perak, Perak menang sebagai Johan dalam Pertandingan Pidato Bahasa Tamil 'Maanavar Muzhakkam' Peringkat Kebangsaan pada 29.08.2020.

மாணவர் முழக்கம் 2020 தேசியநிலைப் போட்டி 29.08.2020ஆம் நாள் சனிக்கிழமை பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் நடைபெற்றது. மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ மு.சரவணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.


மாணவர் முழக்கம் முதல் சுற்றில் நாடு தழுவிய நிலையில் 2300 மாணவர்கள் கலந்துகொண்டனர், இரண்டாம் சுற்றில் 200 மாணவர்களும் அவர்களுள் 20 போட்டியாளர்கள் அரையிறுதிச் சுற்றிலும் கலந்துகொண்டனர். இறுதிப் போட்டிக்கு 4 போட்டியாளர்கள் தேர்வாகினர். கோறனி நச்சில் பெருந்தொற்று காரணமாக இவ்வாண்டின் மாணவர் முழக்கம் அரையிறுதிச் சுற்று வரையில் இயங்கலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பள்ளி ஆசிரியர்களும் பெற்றோரும்


இறுதிப் போட்டியில் மிகச் சிறப்பான வாதத்தை வழங்கி, கருத்து மறுத்தல் அங்கத்தில் சிறப்பான படைப்பை வெளிப்படுத்தி, நடுவர்களின் கேள்விகளுக்கு இலாவகமாகப் பதில்களை வழங்கி பார்வையாளர்களின் மனங்களைக் கவர்ந்து மாணவன் நவஶ்ரீ குகநாத் முதல் பரிசை வாகை சூடினார்.


இதன்வழி நவஶ்ரீ குகநாத் வெற்றிக் கோப்பை, மடிக்கணினி, நற்சான்றிதழ் ஆகியவற்றைப் பரிசாகப் பெற்றார்.

மாணவன் நவஶ்ரீ குகநாத்துக்கு ஆதரவும் உற்சாகமும் ஊட்டுவதற்காகப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு.ஆறுமுகம், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆகிய அனைவரும் உடன் வந்திருந்தனர். அவர்களுடன் சேர்ந்து பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி உதவி இயக்குநர் திரு.சுப.சற்குணன் அவர்களும் இந்த இறுதிப் போட்டியில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நவஶ்ரீ குகநாத்துக்கு ஆதரவளிக்க வந்தவர்கள்

கடந்த 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு மாணவர் முழக்கம் போட்டியில் மீண்டும் இரண்டாவது முறையாக பேரா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் வெற்றி பெற்றிருப்பது பள்ளிக்கும் மாநிலத்திற்கும் பெருமையளிப்பதாக உள்ளது. இந்த வெற்றியின் மூலம் செல்வன் நவஶ்ரீ குகநாத் அடுத்து நடைபெறவுள்ள அனைத்துலக மாணவர் முழக்கம் போட்டியில் மலேசியாவின் நிகராளியாகக் கலந்துகொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமையாசிரியருடன்..

பேரா தமிழ்ப்பள்ளி உதவி இயக்குநருடன்..

இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த மாணவன் நவஶ்ரீ குகநாத், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

வெள்ளி மாநிலம் வெற்றி மாநிலம்

காணொலி

 மேலும் படிக்க..

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

YOUTUBE காணொலி தமிழ்மொழிப் பாடங்கள் - பாகம் 1

மலேசிய சாதனை புத்தகத்தில் தடம் பதிக்கிறார் பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

FIND THE DIFFERENCE - வித்தியாசம் கண்டுபிடி விளையாட்டு