SJK(T) LDG.BATAK RABIT - வைராக்கிய வைரங்களின் சாதனைகள் - மின்னூல் தொகுப்பு

பேரா, கீழ்ப் பேரா மாவட்டம், பாத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாநிலத்தின் மிகச் சிறந்த பள்ளிகளில் ஒன்றாகப் பெயர் பொறித்து வருகின்றது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தொடர்ச்சியான வெற்றிகளும் சாதனைகளும் இப்பள்ளிக்குப் புகழைச் சேர்த்து வருகின்றன. 2025 உருமாற்றுப் பள்ளி [SEKOLAH TRANSFORMASI 2025] தகுதியுயர்வுக்கு ஏற்ப இப்பள்ளி பல கோணங்களிலும் சிறந்த உருமாற்றங்களைக் கண்டு முன்னேறி வருகின்றது.

SJK(T) Ldg.Batak Rabit, Daerah Hilir Perak telah memenangi 5 anugerah peringkat antarabangsa, 8 anugerah peringkat kebangsaan dan 2 anugerah peringkat negeri dalam tempoh Jan - Jun 2021

தலைமையாசிரியர் திரு.ஆறுமுகம் வேலு அவர்களின் சிறப்பான தலைமைத்துவமும் வழிகாட்டலும் இப்பள்ளியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் முழு முதற்காரணமாக விளங்கி வருகின்றது என்றால் மிகையில்லை. பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் ஒருமித்த எண்ணத்தோடு பணியாற்றுவதால் மாணவர் உருவாக்கம் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது என்று சொல்லலாம்.

இந்த 2021இல் இப்பள்ளி அனைத்துலக நிலையில் 5 வெற்றிகளையும் தேசியநிலையில் 8 மற்றும் மாநில நிலையில் 2 சாதனைகளையும் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த அரையாண்டில் அதிகமான வெற்றிகளைக் குவித்துள்ள இப்பள்ளி நிருவாகத்தையும் ஆசிரியர்களையும் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

பாத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் அரிய சாதனைகளைக் கீழே உள்ள மின்னூலில் காணலாம்.

மின்னூலைக் காண படத்தைச் சொடுக்கவும்

[Click image to view flipbook]


Comments

Popular Posts:-

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - NEGERI SELANGOR

வெள்ளி மலர் 3 [Velli Malar Mac 2019]

அனைத்துலக மாணவர் முழக்கம் 2021 - முதல் மற்றும் இரண்டாம் நிலையில் மலேசியாவுக்கு இரட்டை வெற்றி