SJK(T) LDG.BATAK RABIT - மாணவர் முழக்கம் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெற்றது

மாணவர் முழக்கம் 2020 இறுதிப் போட்டிக்குப் பேரா, கீழ்ப்பேரா மாவட்டம், பத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர் ர.நவஶ்ரீகுணநாத் தகுதிப் பெற்றுள்ளார். அறையிறுதிச் சுற்றில் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்ட வேளையில் இறுதிப் போட்டிக்கு 4 மாணவர்கள் தேர்வாகினர். அவர்களுள் ர.நவஶ்ரீகுணநாத் வெற்றிபெற்று பள்ளிக்கு மட்டுமல்லாது பேரா மாநிலத்திற்கே பெருமை சேர்ந்த்துள்ளார்.


மாணவர் முழக்கம் 2020 இவ்வாண்டில் இயங்கலையில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் 2323 மாணவர்கள் கலந்துகொண்டனர். அதிலிருந்து 200 மாணவர்கள் இரண்டாம் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரண்டாம் சுற்றுப் போட்டிகள் 4 மணடல வாரியாக இயங்கலையில் நடைபெற்றது. அதில் 20 மாணவர்கள் அறையிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர். அவர்களுள் 4 போட்டியாளர்கள் பேரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

செல்வன் ர.நவஶ்ரீகுணநாத் வெற்றிக்கு மனமார்ந்த பாராட்டுகள்; பயிற்றுவித்த பத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டியாக இருந்து வழிநடத்திய பள்ளியின் தலைமையாசிரியர் திரு.ஆறுமுகம் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள். 

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

SJK(TAMIL) TUN SAMBANTHAN, BIDOR - ஜொகூர் ஆசிரியர்களின் அடைவுக் குறியீட்டுப் பயணம்

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SJK(T) LADANG CASHWOOD - இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை

தலைமையாசிரியர்களுக்கான தொழிற்றகைமை மேம்பாட்டுப் பயிலரங்கு 2019

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்