SJK(T) METHODIST, MALIM NAWAR - தீபாவளி & சிறுவர் நாள் கொண்டாட்டம்
🎥 காணொலி இணைப்பு
9-12-2021ஆம் மாலிம் நாவார், மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியில் சிறுவர் நாளோடு கோலாகல தீபாவளி கொண்டாட்டம் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
குறுகிய காலத்திலேயே இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடந்தேறியது. இக்கொண்டாட்டத்தில் பள்ளி மாணவர்களின் கைவண்ணத்தில் படைக்கப்பட்ட கண்கவர் ஆடல் பாடலுடன் ஆடை அலங்காரப் படைப்புகளும் இடப்பெற்றன.
இது போன்ற நிகழ்ச்சிகள் கோரணி பெருந்தொற்றின் காரணமாக வீட்டிலேயே இருந்த மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர சிறந்த வாய்ப்பாக அமைந்திருந்தது.
பல மாதங்களாக இல்லிருப்புக் கற்றல் கற்பித்தலிலும் மாவட்ட, மாநில, தேசிய அளவிலானப் போட்டிகளில் சிறப்பாக பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும் தலைமையாசிரியை திருமதி லோகேஸ்வரி பாராட்டுகளைத் தெரிவித்தார். குறுகியக் காலத்தில் அப்போட்டிகளில் சிறப்பான அடைவுகளைப் பதிவு செய்ய மாணவர்களுக்குப் பயிற்றுவித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
மாணவர்களின் பங்களிப்பிற்கான நற்சான்றிதழ்கள் வழங்கும் அங்கமும் இந்நாளில் சிறப்பாக நடந்தேறியது.
சிறுவர் நாளுக்காக உணவும் பனிக்கூழும் வழங்கிய பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவி மு.சுமதிக்கும் அவர் தம் குழுவினர்களுக்கும் தலைமையாசிரியை லோகேஸ்வரி நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
தனிப்பட்ட முறையில் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடத்த உதவிய எல்லாம் நல் உள்ளங்களுக்கும் நன்றியைக் கூறினார்.
இப்பள்ளி மாணவர்களின் அடைவுநிலை சிறப்பாக உள்ளது எனவும் மென்மேலும் பல வெற்றிகளை அடைய வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டார்.
பெற்றோர் ஆசிரியர் சங்க உதவியுடன் அனைத்து மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்படும் திட்டத்திற்கு நல்ல ஆதரவும் கிடைத்திருப்பதை எண்ணி மனநிறைவு அடைவதாகவும் கூறினார்.
மாலிம் நாவார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி தொடர்ந்து கல்வி, புறப்பாட நடவடிக்கைகள், போட்டிகள் ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும் என்பதனைப் பள்ளி தலைமையாசிரியர் ஆ. லோகேஸ்வரி உறுதியாகக் கூறினார்.
எனவே இவ்வாட்டார மக்கள் பிள்ளைகளை மாலிம் நாவார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியை நம்பி தயங்காமல் பதிவுச் செய்யலாம் என்பதனைத் தெரிவித்துக் கொண்டார்.
இங்கு அருகே உள்ள சிறு பட்டணங்களான தஞ்சொங் துவாலாங், பண்டார் பாரு கம்பார் ஆகியவற்றில் இந்திய மக்கள் “தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு” என இந்த மாலிம் நாவாரில் அமைந்திருக்கும் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியைத் தேர்தெடுக்கும் படி வேண்டிக் கொண்டார்.
Comments
Post a Comment