SJK(T) KG.JEBONG LAMA - காரம் குறையாத கடுகுப் பள்ளியின் சாதனைகள்
பேரா, லாருட் மாத்தாங் செலாமா மாவட்டத்தில் செயல்படும் கம்போங் ஜிபோங் லாமா தமிழ்ப்பள்ளி குறைந்த மாணவர் கொண்ட (SKM) பள்ளியாகும். கடுகுக் குறைந்தாலும் காரம் குறையாது என்பதற்கு ஒப்ப சிறு பள்ளியாக இருந்தாலும் கீர்த்தி மிகுந்த பள்ளியாக மிளிர்கின்றது.
2021ஆம் ஆண்டு முழுவதும் இப்பள்ளி பல சிறப்பான நடவடிக்கைளையும் மாணவர் வளப் பணிகளையும் நடத்தியுள்ளது. மேலும், மாவாட்ட மற்றும் மாநில நிலையில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்டு பெயர் பொறித்துள்ளது.
கல்விப் பணியோடு மாணவர் உருவாக்கமும் இப்பள்ளியில் நன்முறையில் நடைபெற்று வருவதைக் காண முடிகின்றது. பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.கி.சந்திரிகா அவர்களின் சிறப்பான தலைமைத்துவத்தில் மிகவும் துடிப்பாகச் செயல்படும் பள்ளியின் ஆசிரியர்களையும் நிச்சயமாகப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.
தலைமையாசிரியர் திருமதி கி.சந்திரிகா |
கம்போங் ஜிபோங் லாமா தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சிறப்பான அடைவுகளையும் சாதனைகளையும் தொகுத்து '2021இன் சாதனை முத்துகள்' எனும் மின்னூலாக உருவாக்கப்பட்டுள்ளது. அதனைக் கீழே காணலாம்.
படத்தைச் சொடுக்கவும்
Kompilasi Kejayaan SJK(T) Kg.Jebong Lama, Daerah LMS, Perak |
கம்போங் ஜிபோங் லாமா தமிழ்ப்பள்ளியின் ஆண்டு நடவடிக்கைகளைக் கீழேயுள்ள '2021இன் சுவடுகள்' மின்னூலில் காணலாம்.
படத்தைச் சொடுக்கவும்
Aktiviti dan Program Sekolah Tahun 2021 |
தமிழ்ப்பள்ளிகள் மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் மாணவர் முன்னேற்றத்திலும் சிறந்த பங்கினை ஆற்றுகின்றன என்பதற்கு நல்ல முன்மாதிரியாகத் திகழும் கம்போங் ஜிபோங் லாமா தமிழ்ப்பள்ளி தொடர்ந்து வெற்றிநடைபோட வாழ்த்துவோம்.
Comments
Post a Comment