மாணவர் முழக்கம் 2020 : அரையிறுதிச் சுற்றுக்கு 4 பேரா மாணவர்கள் தேர்வு பெற்றனர்
மாணவர் முழக்கம் 2020 இவ்வாண்டில் இயங்கலையில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் 2323 மாணவர்கள் கலந்துகொண்டனர். அதிலிருந்து 200 மாணவர்கள் இரண்டாம் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரண்டாம் சுற்றுப் போட்டிகள் 4 மணடல வாரியாக இயங்கலையில் நடைபெற்றது. பேரா மற்றும் பகாங் மாநிலப் போட்டி கடந்த 20.07.2020ஆம் நாள் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
4 orang murid SJK(T) Negeri Perak telah melayakkan diri ke Pertandingan Manavar Mulakkam Peringkat Kebangsaan (Separuh Akhir). Pertandingam ini diadakan pada 20.07.2020 melalui kaedah online. |
சூம் (ZOOM) இயங்கலையில் நடந்த இப்போட்டியில் பேரா, பகாங் ஆகிய 2 மாநிலங்களைச் சேர்ந்த 30 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அவர்களுள் பேரா மாநிலத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் அடுத்து நடைபெறவுள்ள அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர்.
அவர்களின் பெயர் விவரங்களைக் கீழே காணலாம்:-
அரையிறுதிப் போட்டிக்குத் தேர்வுபெற்ற பேரா மாநிலத்தின் 4 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு நன்றியும் பாராட்டும்.
Comments
Post a Comment