SJK(TAMIL) GERIK - யுனெசுகோ நாள் புத்தாக்கக் கண்காட்சி 2018
செப்டம்பர் 28 – 30 வரை
ஈப்போவில் நடைபெற்ற யுனெசுகோ மலேசியா நாளையொட்டி (HARI UNESCO MALAYSIA 2018) புத்தாக்கக் கண்காட்சி
நடைபெற்றது. இதில் பேரா மாநிலத்தைச் சேர்ந்த கிரிக் குழுவகத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்
கலந்துகொண்டு தங்களின் புத்தாக்கப் படைப்புகளைக் காட்சிப்படுத்தினர்.
கிரிக் குழுவகத் தமிழ்ப்பள்ளி
மாணவர்களான சில்வியா மித்ரா (ஆண்டு 5), சூர்யா கண்ணன் (ஆண்டு 3), ஹரிஷ்
கென்னடி (ஆண்டு 3) ஆகிய மூவரும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களைக் கொண்டு தங்களின்
புத்தாக்கத்தை உருவாக்கியிருந்தனர்.
மாணவர்களுடன் சேர்ந்து
பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.இராஜம்பாள், ஆசிரியர்கள் திருமதி சுகுனா மணியம், செல்வி ஈஸ்வரி அர்ஜுணன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அனைத்துலகத் தரத்தில் நடைபெற்ற இந்தப் புத்தாக்கக் கண்காட்சியில் கலந்துகொண்ட ஒரே தமிழ்ப்பள்ளி என்ற சிறப்பினைக் கிரிக் குழுவகத் தமிழ்ப்பள்ளி இதன்வழி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment