SJK(T) LDG.BULUH AKAR - EUROINVENT புத்தாக்கப் போட்டியில் வெள்ளிப் பதக்க பட்டயச் சான்றிதழ் வென்று சாதனை

2 orang murid SJK(T) Ladang Buluh Akar, Daerah Perak Tengah menang Silver Diploma Award dalam pertandingan European Exhibition Of Creativity And Innovation 2022 peringkat antarabangsa

ரோமேனிய நாட்டில் நடைபெற்ற ஐரோப்பிய ஆக்கம் மற்றும் புத்தாக்க கண்காட்சியில் (EUROPEAN EXHIBITION OF CREATIVITY AND INNOVATION - EUROINVENT 2022), பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உருவாக்கிய "எலி, பல்லி, கரப்பான் பூச்சி போன்ற அழிவு செய்யும் உயிரினங்களை கொல்லாமல் இயற்கையாக கட்டுப்படுத்தும் கண்டுப்பிடிப்பு" வெள்ளிப் பதக்கத்திற்கான பட்டயச் சான்றிதழை (DIPLOMA SILVER AWARD)  வென்றது.



இப்போட்டியில் நோர் சஃபிகா முகமது அலி மற்றும் நூருல் நசீரா முகமது நசீர் ஆகிய ஆறாம் ஆண்டு மாணவர்கள் இருவர் கலந்துகொண்டனர். ஆசிரியர் திருமதி அனுராதா முருகேசன் பயிற்றுனராக இருந்து மாணவர்களை வழிநடத்தினார்.  

இயங்கலை வாயிலாக நடைபெற்ற இப்போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து பங்குபெற்ற ஒரே தொடக்கப்பள்ளி பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.


இப்போட்டியில் அமெரிக்கா, கனடா, இந்தியா, உற்பட 27 நாடுகளிலிருந்து 600-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்பாளர்கள்  கலந்து கொண்டனர்.

பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சரஸ்வதி பரமசிவன் அவர்களின் தூண்டுகோலும் ஊக்குவிப்பும் இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்தன. ஏற்கனவே பல அனைத்துலக நிலை புத்தாக்கப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற பட்டறிவின் அடிப்படையில் ஆசிரியர் திருமதி அனுராதா முருகேசன் மீண்டும் ஒருமுறை இந்தச் சாதனையைத் தமது மாணவர்கள் வாயிலாக நிகழ்த்திக் காட்டியுள்ளார்.

பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் சாதனை மாணவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்தும்  பாராட்டுகளும் உரித்தாகட்டும்.

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

YOUTUBE காணொலி தமிழ்மொழிப் பாடங்கள் - பாகம் 1

மலேசிய சாதனை புத்தகத்தில் தடம் பதிக்கிறார் பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

FIND THE DIFFERENCE - வித்தியாசம் கண்டுபிடி விளையாட்டு