SJK(T) LADANG KAMPAR - SAMNOVA 2022 மகிழ் கற்றல் புத்தாக்கப் போட்டியில் ஆசிரியர்களின் சாதனை
![]() |
4 orang guru SJK(T) Ladang Kampar menang pingat perak & gangsa dalam Seminar Amalan PdPc Didik Hibur Peringkat Kebangsaan (SAMNOVA) 2022 |
தென்கிந்தா மாவட்டம், கம்பார் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 4 ஆசிரியர்கள், தேசிய நிலையிலான மகிழ் கற்றல் புத்தாக்கப் போட்டியில் (Seminar Amalan Inovasi Pdpc Didik Hibur Peringkat Kebangsaan SAMNOVA, 2022) பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
குழு நிலை : (வெள்ளிப் பதக்கம்)
புத்தாக்கம் : Reading Wisdom Castle
(நூலகப் பயன்பாட்டின் நனிச்சிறந்த அம்சம்)
சாதனை ஆசிரியர்கள்:
1.திருமதி. நோர்நிஸா மைடின்
2. திருமதி. ரா.விசாலெட்சுமி
தனியாள் நிலை:(வெண்கலப் பதக்கம்)
புத்தாக்கம் : Koordismart
(கணிதப் பாட நனிச்சிறந்த போதனை)
சாதனை ஆசிரியர்:
3 .திருமதி. கி.சங்கீதா
( தேசிய மொழி பாட நனிச்சிறந்த போதனை)
சாதனை ஆசிரியர்:
4. திருமதி.கோ.ஷாமினி தேவி
தங்களின் சிறப்பான மகிழ் கற்றல் புத்தாக்கத்தின் மூலம் கம்பார் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு நடத்தும் இவ்வாசிரியர்களின் சீரிய பணிக்கு நனிச்சிறந்த அங்கீகாரமாக இந்த வெற்றி அமைந்துள்ளது. கம்பார் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் நால்வருக்கும் இவர்களைச் சிறப்பாக வழிநடத்திவரும் தலைமையாசிரியர் திருமதி சு.இராஜேஸ்வரி அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.
Comments
Post a Comment