அறிவியல் விழா [SCIENCE FAIR] 2021 - வெற்றிபெற்ற தமிழ்ப்பள்ளிகளின் நிலவரம்
2021ஆம் ஆண்டுக்கான மாநில நிலை அறிவியல் விழா [ZONE LEVEL SCIENCE FAIR FOR YOUNG CHILDREN 2021] நன்முறையில் நடந்தேறி அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பேரா மாநில நிலையில் 10 தமிழ்ப்பள்ளிகள் மிகச் சிறந்த பள்ளிகளாகத் தேர்வு பெற்றுள்ளன. பேராவில் உள்ள 23 தமிழ்ப்பள்ளிகள் தேசிய நிலை அறிவியல் விழாப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.
பேரா மாநில நிலையில் முதல் பரிசை வாகை சூடிய பள்ளி, லாருட் மாத்தாங் செலாமா மாவட்டத்தைச் சேர்ந்த செயின்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி ஆகும்.
2ஆம் பரிசை வெற்றிகொண்ட பள்ளி, பத்தாங் பாடாங் மாவட்டத்தைச் சேர்ந்த குளுனி தோட்டத் தமிழ்ப்பள்ளி.
3ஆம் பரிசுக்குரிய பள்ளியாக மஞ்சோங் மாவட்டத்தைச் சேர்ந்த சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி வெற்றி கண்டுள்ளது.
தேசிய நிலை அறிவியல் விழாப் போட்டிக்குத் தேர்வு பெற்ற பள்ளிகளின் பட்டியல்:-
Comments
Post a Comment